உள்ளடக்கத்துக்குச் செல்

தைனோபியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைனோபியம்
மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி
(தை. ஜாவானீனேசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தைனோபியம்

இரபின்சுகுயு, 1814
மாதிரி இனம்
தைனோபியம் எரித்ரோனோடசு[1]
இரபின்சுகுயு, 1814
சிற்றினம்

உரையினைக் காண்க

தைனோபியம் (Dinopium) என்பது மரங்கொத்திகள் குடும்பமான பிக்கிடே உள்ள பறவைகளின் பேரினமாகும். இந்த பேரினத்தின் சிற்றினங்கள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

இந்த பேரினம் 1814ஆம் ஆண்டில் பிரெஞ்சு பன்முக அறிஞர் கான்சுடன்டைன் சாமுவேல் இரபினெசுகுவால் பொதுவான பொன்முதுகு மரங்கொத்திkகு (தைனோபியம் ஜாவனென்சே) இடமளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] இந்த பெயர் "வலிமையானது" அல்லது "பெரியது" என்று பொருள்படும். பழமையான கிரேக்க டெய்னோசு (deinos) மற்றும் "தோற்றம்" என்று பொருளாற்றும் ஓப்சு/ஓபோசு (ōps/ōpos) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.[4]

2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மரங்கொத்திகள் குடும்பமான பிக்கிடேயின் ஒரு பெரிய தொகுதி பிறப்பு ஆய்வில் இந்த பேரினம் பாராபைலெடிக் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ்-முதுகு மரங்கொத்திகள் (தைனோபியம் ராப்லெசி) தைனோபியத்தின் பிற சிற்றினங்களை விட வெளிர்-தலை மரங்கொத்திகளுடன் (ஜெசினுலசு கிராண்டியா) மிகவும் நெருக்கமாக தொடர்புடையது.[5]

சிற்றினங்கள்

[தொகு]

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பேரினத்தில் பின்வரும் 5 சிற்றினங்கள் உள்ளன.[6]

படம் அறிவியல் பெயர் பொதுவான பெயர் பரவல்
தைனோபியம் சோரி இமயமலை பொன்முதுகு மரங்கொத்தி வங்கதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம்
தைனோபியம் ஜாவனென்சு மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி வங்கதேசம், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்
தைனோபியம் எவெரெட்டி புள்ளித்தொண்டை மரங்கொத்தி பிலிப்பீன்சு-பலவான் தீவு
தைனோபியம் பெங்கலென்சு பொன்முதுகு மரங்கொத்தி பாக்கித்தான், இமயமலையின் தெற்கே இந்தியா மற்றும் மேற்கே அசாம் பள்ளத்தாக்கு, மேகாலயா, வங்கதேசம், இலங்கை வரை
தைனோபியம் சரோட்சு செம்முதுகு மரங்கொத்தி இலங்கை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Picidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-26.
  2. Rafinesque, Constantine Samuel l Rafinesque (1814). Principes Fondamentaux de Somiologie (in பிரெஞ்சு). Palerme. Inside front cover.
  3. Peters, James Lee, ed. (1948). Check-List of Birds of the World. Vol. 6. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 143.
  4. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 136. ISBN 978-1-4081-2501-4.
  5. Rafinesque, Constantine Samuel (1814). Principes Fondamentaux de Somiologie (in பிரெஞ்சு). Palerme. Inside front cover.
  6. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. Retrieved 17 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைனோபியம்&oldid=4603343" இலிருந்து மீள்விக்கப்பட்டது