உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டானியம் கார்போநைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம் கார்போ நைட்ரைடு பூசப்பட்ட கருவி

தைட்டானியம் கார்போநைட்ரைடு (Titanium carbonitride) என்பது TiCNஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியம் நைட்ரைடை விட இச்சேர்மம் கடினமானது. இதை உயவு எண்ணெய் இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம்.தைட்டானியம் கார்போநைட்ரைடு இயந்திரக் கருவி வெட்டிகளில் நீராவி படிவு மூலம் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

தைட்டானியம் கார்போநைட்ரைடு பூச்சுகள் அதிக கடினத்தன்மை மற்றும் தேய்மான எதிர்ப்பைக் கொண்டுள்ளன. மேலும் இச்சேர்மம் பீங்கான் மற்றும் உலோகம் ஆகியவற்றின் கலவையால் ஆன ஒரு வெப்ப எதிர்ப்பு பொருளாகும். பீங்கான் அதிக கடினத்தன்மையை வழங்குகிறது, மேலும் உலோகம் உறுதித்தன்மையை வழங்குகிறது.[3]

மந்த வாயுவைக் கொண்ட உலையில் தைட்டானியம் டை ஆக்சைடையும் கார்பனையும் வினைபுரியச் செய்து, பின்னர் நைட்ரசன் வாயுவைப் பயன்படுத்தி குறைப்பதன் மூலம் தைட்டானியம் கார்போநைட்ரைடைத் தயாரிக்கலாம்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Want two to four times the tool life over TiN?—You've got to try TiCN coating to see how it can turbocharge tool-performance". Surface Solutions. Retrieved March 7, 2025.
  2. "BryCoat Titanium CarboNitride (TiCN) Coatings". Oldsmar, Florida: BryCoat. Retrieved March 8, 2025.
  3. Bellosi, A.; Calzavarini, R.; Faga, M.G; Monteverde, F.; Zancolò, C.; d'Errico, G.E (2003). "Characterisation and application of titanium carbonitride-based cutting tools". Journal of Materials Processing Technology 143-144: 527–532. doi:10.1016/S0924-0136(03)00339-X. https://archive.org/details/sim_journal-of-materials-processing-technology_2003-12-20_143-144/page/n540. 
  4. Wu, Ke-Han; Jiang, Yu; Jiao, Shu-Qiang; Chou, Kuo-Chih; Zhang, Guo-Hua (2019). "Preparations of titanium nitride, titanium carbonitride and titanium carbide via a two-step carbothermic reduction method". Journal of Solid State Chemistry 277: 793–803. doi:10.1016/j.jssc.2019.07.041. Bibcode: 2019JSSCh.277..793W.