தைட்டனைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
OTi(NCS)2 இன் கட்டமைப்பு (Me3tacn).[1]

தைட்டனைல் (Titanyl) என்பது கனிம வேதியியலில் TiIVO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். பல தைட்டானியம்(IV) ஆக்சைடு சேர்மங்களையும் அணைவுச் சேர்மங்களையும் குறிக்கவும் பொதுவாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக தைட்டனைல் சல்பேட்டும் பொட்டாசியம் தைட்டனைல் பாசுப்பேட்டும் Ti-O-Ti இணைப்புகளைக் கொண்ட TiIVO மையங்களைப் பெற்றுள்ளன. பலபடித்தான வினைவேக மாற்ற வினைகளில் தைட்டானியம்(IV) மையத்தின் மேற்பரப்பில் உள்ள விளிம்பு ஆக்சோ ஈந்தணைவியாக தைட்டானியம் கருதப்படுகிறது. மிகச்சில மூலக்கூற்று தைட்டனைல் அணைவுச் சேர்மங்களில் மட்டும் ஆக்சோ ஈந்தணைவி பாலம் அமைக்காமல் ஆனால் விளிம்பில் மட்டும் அமைந்திருக்கிறது [2]. இதை முப்பிணைப்பு Ti≡O கொண்டிருப்பதாக விவரிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Axel Bodner, Peter Jeske, Thomas Weyhermueller, Karl Wieghardt, Erich Dubler, Helmut Schmalle, Bernhard Nuber (1992). "{Mono- and Dinuclear Titanium(III)/Titanium(IV) Complexes with 1,4,7-Trimethyl-1,4,7-triazacyclononane (L). Crystal Structures of a Compositionally Disordered Green and a Blue Form of [LTiCl3]. Structures of [LTi(O)(NCS)2], [LTi(OCH3)Br2](ClO4), and [L2Ti2(O)2F2(mu-F)](PF6)". Inorganic Chemistry 31: 3737-3748. doi:10.1021/ic00044a015. 
  2. John Meurig Thomas, Gopinathan Sankar (2001). "The Role of Synchrotron-Based Studies in the Elucidation and Design of Active Sites in Titanium−Silica Epoxidation Catalysts". Accounts of Chemical Research 34: 571-581. doi:10.1021/ar010003w. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டனைல்&oldid=2574389" இலிருந்து மீள்விக்கப்பட்டது