தைடாரி
தைடாரி Daitari | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 21°06′N 85°45′E / 21.1°N 85.75°E | |
| நாடு | |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | கேந்துசர் |
| ஏற்றம் | 229 m (751 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 4,065 |
| மொழிகள் | |
| • அலுவல் | ஒடியா மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | ஓடி 09 |
| இணையதளம் | odisha |
தைடாரி (Daitari) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கேந்துசர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும்.
புவியியல்
[தொகு]21°06′N 85°45′E / 21.1°N 85.75°E.[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் தைடாரி நகரம் கடல் மட்டத்திலிருந்து 550 மீட்டர் அல்லது 1804 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[2] தைடாரி நகரத்தின் மக்கள் தொகை 4239 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 54% ஆகவும் பெண்கள் 46%. ஆகவும் இருந்தனர். இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 69% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும். ஆண்களில் 78% மற்றும் பெண்களில் 60% கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[3] தைடாரி நகரத்தின் மக்கள் தொகை 2707 குடும்பங்களில் 4,065 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 2162 ஆகவும் பெண்கள் 1903 ஆகவும் இருந்தனர். இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 82.81.9% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 72.87% என்பதை விட அதிகமாகும். ஆண்களில் 92.26% மற்றும் பெண்களில் 71.74% கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் 13.55% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Daitari
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Daitari Census Town City Population Census 2011-2025 | Orissa". www.census2011.co.in. Retrieved 2025-10-07.