தேவ் கோட்டை
தோற்றம்
| தேவ் கோட்டை | |
|---|---|
| தியோ இராஜ் விராசத் | |
| அமைவிடம் | இந்தியாவின் பீகாரின் கோட்டையின் அமைவிடம் |
| ஆள்கூற்றுகள் | 24°39′32″N 84°26′03″E / 24.6589°N 84.4342°E |
| உயரம் | 40 அடி |
தேவ் கோட்டை (Deo Fort) தியோ கோட்டை எனவும் அறியப்படும் இது பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் தியோ நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். மேவாரில் தோன்றிய சிசோதிய இராஜ்புத்திரர்களாக இருந்த தியோ இராச்சிய ஆட்சியாளர்களால் இது பராமரிக்கப்பட்டது.[1] இந்தக் கோட்டை தேவ் சூரிய தேவன் கோயில் அருகில் அமைந்துள்ளது.[1]
தேவின் கடைசி மன்னர் ஜெகந்நாத் சிங்கிற்கு இரண்டு மகன்கள் இருந்தனர். கடைசி அரசன் ஜெகந்நாத் பிரசாத் சிங் 1934 ஏப்ரல் 16 அன்று இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு இளைய ராணி பொறுப்பேற்று 1947 வரை ஆட்சி செய்தார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Anirudha Behari Saran; Gaya Pandey (1992). Sun Worship in India: A Study of Deo Sun-Shrine. Northern Book Centre. pp. 29–. ISBN 978-81-7211-030-7.
- ↑ "Dev Fort - Wikimapia". wikimapia.org.
- ↑ "Biography of Kunwar Singh and Amar Singh". K. P. Jayaswal, Patna. 1957.