தேவேந்திர படேல்
தேவேந்திரப் படேல் Devendra Patel | |
---|---|
பதவியில் 2008–2013 | |
தொகுதி | சில்வாணி சட்டமன்றத் தொகுதி |
தேவேந்திர படேல் (Devendra Patel) என்பவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2008ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சில்வாணி சட்டமன்றத்தொகுதிக்குப் போட்டியிட பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு போராடித் தேர்தலில் போட்டியிட்டார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராம்பால் சிங்கை 247 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2] கட்சியின் நிறுவனர் உமா பாரதி பாரதிய ஜனதாவுடன் பாரதீய ஜனசக்தி கட்சியினை இணைத்த பின்னர் தனக்கு உரிய முக்கியத்துவம் இல்லை எனக் கூறி 2013 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது 17 ஆதரவாளர்களுடன் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[3] 2014இல் அவர் கோசங்காபாத்மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Madhya Pradesh Assembly Election 2008". http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=207&cid=143.
- ↑ "Madhya Pradesh Elections Results : Oct 2008 : Silwani Assembly : Detailed". pardaphash.com. http://www.pardaphash.com/election/state/madhyapradesh/constituency/1663/200810/.
- ↑ Press Trust of India (31 October 2013). "BJP MLA Devendra Patel joins Congress ahead of Assembly elections". news18.com. http://www.news18.com/news/madhya-pradesh/bjp-mla-devendra-patel-joins-congress-ahead-of-assembly-elections-251165.html.
- ↑ "Indian National Congress". Inc.in. http://inc.in/resources/press-releases/410-lok-sabha-elections-2014.
- ↑ https://www.electionadmin.in/ls/results/candidate/search/DEVENDRA%20PATEL%20%22GUDDU%20BHAIYA%22[தொடர்பிழந்த இணைப்பு]