உள்ளடக்கத்துக்குச் செல்

தேவேந்திர குமார் ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி
டிகே ஜோஷியின் அலுவல்முறை ஒளிப்படம்
பிறப்புசூலை 4, 1954 (1954-07-04) (அகவை 69)
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியக் கடற்படை
தரம்அட்மிரல்
கட்டளைஇந்தியக் கடற்படையின் கடற்படை வீரர்களின் முதன்மைத் தலைவர்
மேற்கத்திய கடற்படை ஆணை
அந்தமான் நிக்கோபார் ஆணை
விருதுகள்

அட்மிரல் தேவேந்திரக் குமார் ஜோஷி பரம் விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் (Admiral Devendra Kumar Joshi, பிறப்பு: 4 சூலை 1954) ஆகத்து 31, 2012இல் இந்தியக் கடற்படை வீரர்களின் முதன்மைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். having assumed office on 31 ஆகத்து 2012. நீர்மூழ்கிக் கப்பல் போர்முறையில் வல்லுனராக விளங்கினார். கடற்படை கலங்களிலும் நீர்மூழ்கி கப்பல்களிலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த விபத்துகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பெப்ரவரி 26, 2014இல் தமது பதவியிலிருந்து விலகினார். இவ்வாறு பதவி விலகிய முதல் இந்தியக் கடற்படை முதன்மைத் தலைவர் இவரேயாவார்.[1][2] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் குறிப்புக்களின்படி அட்மிரல் டிகே ஜோஷியின் பதவிக்காலம் ஆகத்து 2015 வரையாகும். மிகவும் கடினமாக வேலை வாங்குபவராக இருந்த ஜோஷி கப்பல்களை குறைந்த வளங்களைக் கொண்டு இயக்குவதில் சிறந்தவர். அவர் பணிபுரிந்த ஆணைகளில் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக விளங்கினார். எனவே அதே அளவுகோலின்படி தன்னையும் நிறுத்தி பொறுப்பேற்று விலகியதாக கடற்படை மூத்த அதிகாரிகள் கூறுவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "DK Joshi resigns"."DK Joshi resigns".
  2. "Chief of Naval Staff Admiral DK Joshi Resigns". PIB. 26 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. http://timesofindia.indiatimes.com/india/Admiral-DK-Joshi-ran-tight-ships-was-hard-taskmaster/articleshow/31062424.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_குமார்_ஜோஷி&oldid=2720256" இலிருந்து மீள்விக்கப்பட்டது