உள்ளடக்கத்துக்குச் செல்

தேவேந்திரன் மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவேந்திரன் மூர்த்தி
Davendran Murthy
பகாங் மாநில சட்டமன்றம்
சாபாய் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1999–2013
முன்னையவர்ஆர். சின்னத்தம்பி
(பாரிசான்மஇகா)
பின்னவர்காமாட்சி துரை ராஜு
(பாக்காத்தான்ஜசெக)
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிபாரிசான் (BN)-மஇகா) (MIC) (1999–2013)
பணிஅரசியல்வாதி

தேவேந்திரன் மூர்த்தி (ஆங்கிலம்; மலாய்: Davendran Murthy) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1999 முதல் திசம்பர் 2013 வரை பகாங் மாநில சட்டமன்றத்தில், சாபாய் சட்டமன்றத் தொகுதியின் (N35) சட்டமன்ற உறுப்பினராக (MLA) தொடர்ந்து மூன்று முறை பணியாற்றினார்.[1]

அவர் 1999-இல் ஆர். சின்னத்தம்பிக்குப் பிறகு பதவியேற்றார். 2013-இல் காமாட்சி துரை ராஜு இவருக்குப் பிறகு சாபாய் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.

அரசியல்

[தொகு]

அவர் மலேசிய இந்தியர் காங்கிரசு (MIC) கட்சியின் மூத்த உறுப்பினராகவும், கட்சியின் பகாங் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராகச் சேவை செய்த இருந்த காலத்திற்குப் பிறகும், பகாங்கின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சியாரா காசே திட்டம் (Ziarah Kasih) போன்ற சமூக நலத்திட்டங்களிலும்; மாநில அரசுத் திட்டங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.[2]

சபாய் தொகுதியில், குறிப்பாக மாநில அரசுக்கும் இந்திய சமூகத்திற்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதில் நீண்டகாலமாக ஆற்றிய பணிக்காக அவர் நன்கு அறியப்படுகிறார். பகாங் மாநிலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் டத்தோ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்ர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AHLI-AHLI DEWAN UNDANGAN NEGERI PAHANG DARUL MAKMUR". roslela.tripod.com. Retrieved 1 February 2026.
  2. "PROGRAM ZIARAH KASIH BEKAS ADUN PAHANG PROGRAM TERBAIK - Pahang Media". pahangmedia. 17 October 2024. Retrieved 1 February 2026.
  3. "Bahagian Istiadat Dan Urusetia Persidangan Antarabangsa" (PDF). istiadat.gov.my. Retrieved 1 February 2026.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திரன்_மூர்த்தி&oldid=4464484" இலிருந்து மீள்விக்கப்பட்டது