தேவேசு சௌகான்
| Alma mater | இயாமியா மில்லியா இசுலாமியா | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| விளையாட்டு | ||||||||||||||||||||||||||
| நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||
| விளையாட்டு | வளைகோற் பந்தாட்டம் | |||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||
தேவேசு சௌகான் (Devesh Chauhan) இந்தியாவைச் சேர்ந்த வளைகோற்பந்தாட்ட வீரராவார். வளைகோற் பந்தாட்டத்தில் இலக்குக்காப்பளார் நிலையில் இவர் விளையாடினார். 1981 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டாவா நகரத்தில் இவர் பிறந்தார். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஆண்கள் தேசிய அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார். சௌகான் தனது தாய்நாட்டை 2000 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் 2004 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த இரண்டு முறையும் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது. சௌகான் 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அருச்சுனா விருதையும், 2001 ஆம் ஆண்டில் இலட்சுமண் விருதையும், 2005 ஆம் ஆண்டில் யசு பாரதி விருதையும், 2006 ஆம் ஆண்டில் அகில்யாபாய் இல்லாரி விருதையும் உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் பெற்றார். சௌகான் புது தில்லியில் உள்ள இயாமியா மில்லியா இசுலாமியா ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவராவார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Devesh Singh Chauhan". Archived from the original on 9 October 2006.