உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி பிரசாத் (கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவி பிரசாத்  (1921—சூன் 1, 2011) இந்தியாவின் களிமண் சிற்பக்கலைஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர், அகிம்சைவாதி மற்றும் உலக அமைதிக்கான செயற்பாட்டாளர் ஆவார்.[1] தேவி பிரசாத் வங்கக்கவிஞர் தாகூரின் சாந்திநிகேதனில் தங்கிப் பயின்றவர். தேவி பிரசாத் அமைதிக்காகவும் அகிம்சைக்காகவும் தம் வாழ்க்கை முழுக்கச்  செயல்பட்டார். காந்தி அடிகள், ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவர்.

வாழ்வும் செயல்களும்

[தொகு]

சாந்தி நிகேதனில் படிப்பை முடித்ததும்  தேவி பிரசாத் 1942இல் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தில் காந்தியடிகளுடன் இணைந்தார். 1951 இல் வினோபா பாவே நடத்திய பூமி தான இயக்கத்திலும் சேர்ந்தார். சேவா கிராமத்திற்கு வந்தார்.  1962 வரை சேவா கிராமத்தில் தங்கி ஒரு கலைக் கூடத்தை நிறுவி புதிய கல்வி என்ற இதழை நடத்தி வந்தார். இலண்டனில் இருந்து உலக அளவில் அகிம்சைக் கோட்பாட்டை செயல்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைத்தார். 1983 இல்  இந்தியா திரும்பினார். களிமண் சிற்பக்கலைக் கூடத்தை நிறுவினார்.

கண்காட்சி

[தொகு]

1938 முதல் 2004 வரை இவர் உருவாக்கிய ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றைக்  காட்சிப்படுத்தி ஒரு கண்காட்சி 2010 ஆண்டு மே மாதத்தில் புது தில்லியில் நடத்தப்பட்டது.  இந்தக் கண்காட்சியில் தேவி பிரசாத்தின் படைப்பாக்கங்கள் வைக்கப்பட்டன. 1938 இல் அவர் சாந்திநிகேதனில் உருவாக்கியவையும் 2003- 2004 இல் புதுதில்லியில் தம் ஸ்டுடியோவில் செய்தவையும் அடங்கும்.

நூல்கள்

[தொகு]

பன்னாட்டு போர் எதிர்ப்பாளர்கள் என்னும் அமைப்பின் பொதுச்செயலாளர் என்னும் பொறுப்பை ஏற்று அதனை நடத்தி வந்தார். காந்தியும் புரட்சியும் என்ற நூலை எழுதினார். போர் என்பது மனிதத்திற்கு எதிரான குற்றம் என்னும் தலைப்பில் ஒரு நூலும் 2005 இல் வெளியிடப்பட்டது.ஆக்கத்திற்கும் அமைதிக்கும் கல்வி, ராம்கிங்கர் வாய்ஜ்:சிற்பங்கள் என்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார்.[2]

பிற செய்திகள்

[தொகு]

நமன் பி அகுஜா என்ற ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர், தம் குருவான தேவி பிரசாத்தின் இயல்புகளைப் பற்றியும் சாதனைகளைப் பற்றியும் ஒரு நூல் எழுதியுள்ளார். [3] வங்கக் கலைஞர்கள் நந்தலால் போஸ், ராம்கிங்கர் வாய்ஜ் போன்றோரிடம் இவர் பயிற்சி பெற்றார். சத்தியஜித் ரே, மிருணாளினி சாராபாய்,  கே.ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் தேவி பிரசாத்தின் மாணவர்கள் ஆவர்.[4]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_பிரசாத்_(கலைஞர்)&oldid=2711572" இலிருந்து மீள்விக்கப்பட்டது