உள்ளடக்கத்துக்குச் செல்

தேவாசு வாயில் மாநிலங்களிடை பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாசு வாயில் மாநிலங்களிடை பேருந்து நிலையம்
Dewas Gate Inter State Bus Stand
சாகீத் இராசா பாவ் மகாகால் பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்உச்சைன், மத்தியப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்23°10′52″N 75°46′55″E / 23.181°N 75.782°E / 23.181; 75.782
உரிமம்உச்சைன் நகராட்சி ஆணையம்
இயக்குபவர்உச்சைன் நகராட்சி ஆணையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரை மட்டம்
நடைமேடை அளவுகள்1
தரிப்பிடம்ஆம்
வரலாறு
மறுநிர்மாணம்2014
சேவைகள்
மாநிலங்களுக்கு இடையில்

தேவாசு வாயில் மாநிலங்களிடை பேருந்து நிலையம் (Dewas Gate Inter State Bus Stand) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உச்சைனியில் அமைந்துள்ளது. சாகீத் இராசா பாவ் மகாகால் பேருந்து நிலையம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. தேவாசு வாயில் முனையமானது பிற மாநிலங்களில் உள்ள இடங்களுக்குப் பேருந்து சேவைகளையும் நீண்ட தூரப் பேருந்து சேவைகளுக்கான முக்கிய போக்குவரத்து மையமாகவும் செயல்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையம் நானா கேடா ஆகும். தேவாசு வாயில் முனையமானது அதே மாநிலத்திற்குள் உள்ள இடங்களுக்கும் பேருந்து சேவைகளை வழங்குகிறது. உச்சைனி இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மலிபுரா பகுதியில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளது.[1][2][3]

சிம்கசுத்தா கும்பமேளா விழா காலத்தில் இந்தப் பேருந்து நிலையம் பிரதான பேருந்து நிலையமாகும். இங்கிருந்து செய்ப்பூர், அச்மீர், இந்தூர், போபால், புனே, குசராத்து, மகாராட்டிரா, இராசத்தான் மற்றும் பல்வேறு பிற இடங்களுக்குப் பேருந்துகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Ujjain: Mahashivratri preparations go on in full swing
  2. ↑ Commuters affected as private bus operators hold strike against admin
  3. ↑ Concrete arrangements made to deal with fire incidents during Simhastha