தேவாங்க புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தேவாங்க புராணம் என்பது தேவாங்க சமூகத்தின் குலக்கதை அல்லது தொன்ம வரலாறு. இது அவர்களின் புகழ்பெற்ற நிறுவனரான, தேவால மகரிசியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஏழு அவதாரங்கள், சௌடேஸ்வரி அன்னை, சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் விவரிக்கிறது. தேவாங்க சமூகத்தவர்கள் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் இவர்கள் பிளவுபட்டுள்ளனர்.. அவர்கள் பாரம்பரியமாக பருத்தி துணி நெசவு மற்றும் துணி வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமயம்[தொகு]

தேவாங்கர்களின் முக்கிய தெய்வங்கள்: அருள்மிகு இராமலிங்க சௌடேசுவரி அம்மன் அல்லது அருள்மிகு சௌடேசுவரி தேவி மற்றும் ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆவர். [1]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சுமார் கி.பி. 1532 ஆந்திர பிரதேசத்தில் உள்ள தேவாங்க மக்கள் தங்கள் குலபுராணத்தை எழுதும்படி தெலுங்கு கவிஞர் பத்ரலிங்க கவியிடம் கோரிக்கை விடுத்தனர், இதன் விளைவாக தேவாங்க புராணம் உருவானது. இது தாசிமாத்ரா-திவிபதி பாணியில் கவிதைகளாக எழுதப்பட்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • தேவாங்க புராணம், archive.org (கன்னடத்தில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாங்க_புராணம்&oldid=3425628" இருந்து மீள்விக்கப்பட்டது