தேவர்மலை கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேவர்மலை கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு வைணவக் கோயிலாகும்.

இருப்பிடம்[தொகு]

கரூர் நகாிலிருந்து பாளையம் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்மலையில் கதிர்நரசிங்கப் பெருமாள் கோவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமைந்திருக்கிறது. கரூாிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் பாளையம் உள்ளது. பாளையத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் குருணி குளத்துப்பட்டி உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ தொலைவில் தேவர்மலை உள்ளது. பாளையத்திலிருந்து திருச்சி மற்றும் மணப்பாறைக்குச் செல்லும் பேருந்துகள் தேவர்மலை வழியாகச் செல்கின்றன. ஆரம்பத்தில் தேவர்மாி என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இப்போது 'தேவர்மலை' என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் திறக்கப்படும்.

மோட்ச தீர்த்தம்[தொகு]

தேவர்கள் உருவாக்கிய மோட்ச தீர்த்தம் இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இது ராமர், சீதாதேவி, லஷ்மணன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு அருகில் உள்ளது. ஆகாச தீர்த்தம் என்றும் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்ற இத்தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட புனித நீருடன் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலின் மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் உள்ளார். இறைவி கமலவல்லித் தாயார் ஆவார். லட்சுமி நாராயண பெருமாள், மகாவிஷ்ணு, கருடாழ்வார், ராமானுஜர் மற்றும் பைரவருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. வில்வமரம் தல விருட்சமாக உள்ளது. மூலவர் 'உக்கிரநரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இடது கை அக்வான முத்திரையிலும் வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மூன்றாவது கண் ஓர் அாிய வெளிப்பாடு ஆகும்.

நம்பிக்கை[தொகு]

கமலவல்லித் தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், மனம் தொடர்பான பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதாகவும் பிரதோசத்தில் 11 முறை கோவிலுக்குச் செல்வதால் நாம் விரும்பும் அனைத்தையும் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. அவ்வாறே மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

விழாக்கள்[தொகு]

மார்கழி மாதத்தில் கருட சேவை, வைகாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். சுவாதி நட்சத்திரத்தில் கமலவல்லி தாயாருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது கோயிலில் ஒரு நேர பூசை நடைபெறுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/en/new_en.php?id=1012
  2. http://prtraveller.blogspot.com/2011/08/kathir-narasinga-perumal-devar-malai_27.html