தேவரகொண்டா விட்டல் ராவ்
தேவரகொண்டா விட்டல் ராவ் (Devarakonda Vittal Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தந்தை சாயப்பா, ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள லகச்சர்லா என்ற தொலைதூர கிராமத்தில் மூலிகை மருத்துவராக இருந்தார். தாயார் திமம்மா ஒரு இல்லத்தரசி. தேவரகொண்டா விட்டல் ராவ் தனது முதுநிலை பட்டப் படிப்பை முடித்தார். மாணவர் தலைவராகவும் பணியாற்றினார்.
தொழில்
[தொகு]ஆந்திரப் பிரதேச காங்கிரசு குழுவின் இணைச் செயலாளர் பதவியிலிருந்து பொருளாளர் பதவி வரையும், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகவும் அரசியல் பதவி உயர்வு பெற்றார்.
இறப்பு
[தொகு]28 மே 2016ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று தேவரகொண்டா விட்டல் ராவ் இறந்தார். குடும்பத்தினர் இது ஒரு சாதாரண மரணம் என்று அறிவித்தனர்.[1]