தேவரகொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவரகொண்டா
நகரம்
தேவரகொண்டா கோட்டையின் காட்சி
தேவரகொண்டா கோட்டையின் காட்சி
தேவரகொண்டா is located in தெலங்காணா
தேவரகொண்டா
தேவரகொண்டா
தெலங்காணாவில் தேவரகொண்டாவின் அமைவிடம்
தேவரகொண்டா is located in இந்தியா
தேவரகொண்டா
தேவரகொண்டா
தேவரகொண்டா (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°42′00″N 78°56′00″E / 16.7000°N 78.9333°E / 16.7000; 78.9333ஆள்கூறுகள்: 16°42′00″N 78°56′00″E / 16.7000°N 78.9333°E / 16.7000; 78.9333
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நல்கொண்டா
பரப்பளவு[1]
 • மொத்தம்28.18 km2 (10.88 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்29,731
 • அடர்த்தி1,100/km2 (2,700/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுடிஎஸ்
இணையதளம்telangana.gov.in

தேவரகொண்டா (Devarakonda) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது தேவரகொண்டா பிரிவின் தேவரகொண்டா மண்டலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். [2] [3] இது மாவட்ட தலைமையகமான நல்கொண்டாவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (5 மீ) தொலைவிலும், மாநிலத் தலைநகர் ஐதராபாத்து நகரிலிருந்து 108 கிலோமீட்டர் (5 மீ) தொலைவிலும் அமைந்துள்ளது. ஊருக்கு அருகில் ஒரு பழங்கால கோட்டை உள்ளது, இது தேவரகொண்டா என்றும் அழைக்கப்படுகிறது. இடைக்காலத்தில், கிராமம் உள்ளூர் வணிக மையமாக வளர்ந்தது.

இங்குள்ள திண்டி நீர்த்தேக்கம் ஒரு காலத்தில் இரச்செர்லா நாயக்க வம்சத்தின் கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது இடிந்து கிடக்கிறது. இது ஒரு முக்கியமான பண்டைய தளமாகும். இந்தக் கோட்டை ஏழு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. நல்கொண்டா, மகபூப்நகர், மிரியாலகுடா மற்றும் ஐதராபாத்து ஆகிய இடங்களிலிருந்து சாலை வழியாக இதனை அணுகலாம்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவரகொண்டாவில் 37,434 என்ற அளவில் மக்கள் தொகை உள்ளது. இதில் ஆண்கள் 53% பெண்கள் 47% என இருக்கின்றனர். தேவரகொண்டாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 81% மற்றும் பெண் கல்வியறிவு 63%. தேவரகொண்டாவில், மக்கள் தொகையில் 12% 6 வயதுக்குட்பட்டவர்கள். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census Handbook - Nalgonda" (PDF). Census of India. p. 13,386. 15 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Division wise mandals list" (PDF). Official website of Nalgonda district. National Informatics Centre. pp. 11–12. 8 October 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 15 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Nalgonda district info". Official website of Nalgonda district. National Informatics Centre. 16 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவரகொண்டா&oldid=3147193" இருந்து மீள்விக்கப்பட்டது