தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,தேவனூர்

ஊ.ஒ.ந.நி. பள்ளி, தேவனூர்
பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஊர்: தேவனூர்
ஒன்றியம்: கொங்கணாபுரம்
வட்டம்: எடப்பாடி
மாவட்டம்: சேலம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
தோற்றம்: 12.06.1971

நிர்வாகம்[தொகு]

 தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறை யின் கீழ் செயல்படும் தேவனூர் ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொங்கணாபுரம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

      இப்பள்ளியில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கற்றல் கற்பித்தல் முறைகள்[தொகு]

         இப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறை யிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறை யிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை யிலும் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. விளையாட்டு வழிக் கல்வி,கணினி வழிக் கல்வி,உடற்கல்வி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகள்[தொகு]

  • கணினி வழிக் கற்றல்
  • தலைமேல் படவீழ்த்தி மூலம் கற்றல்
  • முப்பரிமாண, நாற்பரிமாண உருவ வழி கற்றல்
  • ஹாலோகிராம் பட வீழ்த்தி மூலம் கற்றல்
  • கணினி கல்வி
  • மென்பொருள் மூலம் தானே கற்றல்

இணைய பக்கங்கள்[தொகு]

பள்ளிக்கான யூட்யூப் சேனல்

https://m.youtube.com/channel/UCUUwJGeFgdsG2I8aAAJyMJg

பள்ளிக்கான முகநூல் பக்கம்

https://www.facebook.com/DevanoorPUMS/