தேவனாம்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகரின் தூண்களில் பல்வேறு "தேவானாம் பியோ பிய தஸி" கல்வெட்டுகள்.
"தேவானாம் பியோ பியாச அசோகா", மரியாதைக்குரிய தேவனாம்பிரியா ( பிராமி எழுத்து : 𑀤𑁂𑀯𑀸𑀦𑀁𑀧𑀺𑀬𑀲𑀅𑀲𑁄𑀓, "கடவுளால் நேசிக்கப்படுபவர்") மற்றும் மஸ்கியில் உள்ள அசோகரின் கல்வெட்டில் பிராமி எழுத்தில் அசோகர் குறிப்பிடப்படுகிறார்.
அசோகரின் லும்பினி சிறு தூண் கல்வெட்டு ஆணையில் "தேவாநம்பியா" (𑀤𑁂𑀯𑀸𑀦𑀁𑀧𑀺𑀬𑁂𑀦: "தேவநம்பிய") என்பது பிராமி எழுத்தில்.

தேவனாம்பிரியா (Devanampriya, மேலும் Devanampiya ( பிராமி எழுத்து : 𑀤𑁂𑀯𑀸𑀦𑀁𑀧𑀺𑀬, Devanampiya), என்பது பாளி மொழியில் ஒரு சில இந்திய முடியரசர்கள் பயன்படுத்தப்படுத்திய மரியாதைக்குரிய புனைபெயராகும். இதை குறிப்பாக இந்திய பேரரசர் அசோகர் (r.269-233 கி.மு.) தனது கல்வெட்டுகளில் பெரும்பாலும் ( அசோகரின் பிரகடனங்களில் ) பயன்படுத்தியுள்ளளார். [1] "தேவனாம்பிரியா" என்றால் "தேவர்களுக்குப் பிரியமானவர்" என்பது பொருளாகும். இது அசோகரால் பிரியதர்சி என்ற பட்டத்துடன் சேர்த்து அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது, அதாவது "மற்றவர்களை கருணையுடன் நோக்குபவர்", "மனிதநேயர்" என்பது பொருளாகும். [1]

எவ்வாறாயினும், கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1 ஆம் நூற்றாண்டு வரை உத்திய முதல் யசலலகதிசா வரையிலான பல இலங்கை மன்னர்களால் இந்த பட்டம் பயன்படுத்தப்பட்டது. [2]

அசோகரின் பெரும்பாறைக் கலவெட்டுகளில் கல்வெட்டு ஆணை எண்.8 இல் (கல்சி, உத்தரகண்டம்) முந்தைய மன்னர்களை விவரிக்க "தேனாம்பிரியாஸ்" என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது (மற்ற கல்வெட்டுகளில் "மன்னர்கள்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது), "தேவனாம்பிரியா" என்ற பட்டமானது மிகவும் பரந்த அளவில் பயன்பாட்டைக் கொண்டிருந்தது மேலும் அது மிகவும் பொதுவானதாக "மன்னர்" என்று பொருள் கொண்டதாக இருந்திருக்கலாம். [3] [4]

பிரின்ஸ்செப் தனது ஆய்வு மற்றும் அசோகரின் கலவெட்டு ஆணைகளை புரிந்து கொள்லும் முயற்சியில் முதலில் தேவனாம்பரிய பிரியதசியை அனுராதபுரத்தின் இலங்கை மன்னனான தேவநம்பிய தீசன் என கருதினார். இருப்பினும், 1837 ஆம் ஆண்டில், ஜோர்ஜ் டேனர் இலங்கையில் கண்டுபிடித்த கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு ( தீபவம்சம் அல்லது "தீவின் வரலாறு" ) அதன் வழியாக அசோகருடன் பியதாசியை தொடர்புபடுத்தினார்:

அப்போதிருந்து, அசோகனுடன் "தேவனாம்பிரியா பிரியதர்சி" என்ற சொல்லானது அவரின் பல்வேறு கல்வெட்டுகள் மூலம் வலுப்படுத்தப்பட்டது. மேலும் குறிப்பாக மஸ்கியில் கண்டுபிடிக்கபட்ட அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டடில் தேவனம்பிரியாவுடன் சிறப்பாக தொடர்புபடுத்தியது. [1]</ref> [5]

வரலாற்று பயன்பாடு

தேவனாம்பிரியா கீழ்கண்டவர்களைக் குறிப்பிடலாம்:

  • கிமு 307 முதல் 267 வரை பண்டைய தலைநகரான அனுராதபுரத்தை தளமாகக் கொண்டு ஆண்ட இலங்கையின் மன்னர் தேவநம்பிய தீசன் (கிமு 267 இல் இறந்தார்).
  • அசோகர் (சுமார் 304–232 கிமு), மௌரிய வம்சத்தின் பேரரசர்
  • அசோகரின் பேரன் தசரத மௌரியர் (கிமு 232 முதல் 224 வரை), அவரது பராபர் குகைக் கல்வெட்டுகளில், "தேவானம்பிய தசரதா" என்ற வடிவத்தில்.
  • வானவரம்பன், "கடவுள்களால் நேசிக்கப்படுபவர்" என்பதற்கான துவக்ககால தமிழ் பட்டப் பெயரானது சங்ககால தமிழகத்தின் சேரர்களின் பட்டப் பெயராக இருந்தது.

குறிப்புகள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவனாம்பிரியா&oldid=3588390" இலிருந்து மீள்விக்கப்பட்டது