தேவனஹள்ளி கோட்டை
தேவனஹள்ளி | |
---|---|
கிராமம் | |
![]() உட்புறாத்திலிருந்து கோட்டையின் நுழைவு வாயில் | |
ஆள்கூறுகள்: 13°14′59″N 77°42′34″E / 13.24960°N 77.70939°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு ஊரக மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
தேவனஹள்ளி கோட்டை (Devanahalli Fort) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளியில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இது பெங்களூர் நகரிலிருந்து வடக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் அவதியின் தலைவரான மல்ல பைரே கவுடா, ஒரு மண் கோட்டையை சுமார் 1501களில் தேவனதொட்டியில் (இப்போது தேவனஹள்ளி என்று அழைக்கப்படுகிறது). 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐதர் அலி கோட்டையை கல்லில் மீண்டும் கட்டினார்.
இது முதலில் 1501ஆம் ஆண்டில் மல்ல பைரே கவுடா என்பவரால் கட்டப்பட்டது.[1][2][3][4] இது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இவரது சந்ததியினரின் கைகளில் இருந்தது. 1749இல், மைசூரின் அப்போதைய தலவாய், நஞ்சராஜையா, கோட்டையைத் தாக்கி அதை ஆக்கிரமித்தார். பின்னர், கோட்டை ஐதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானின் கைகளுக்கும் சென்றது.[2] 1791ஆம் ஆண்டில், கார்ன்வாலிஸ் பிரபு கோட்டையை முற்றுகையிட்டு ஆங்கிலேய-மைசூர் போரின் போது கைப்பற்றினார்.
'மைசூரின் புலி' என்றும் அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறப்பிடம் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.[5] இந்தக் கோட்டை பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 7 இன் பக்கத்தில் அமைந்துள்ளது.
கோட்டைக்கு வெளியேயும், திப்பு சுல்தானின் பிறந்த இடத்தையும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவித்துள்ளது. [6][7]
வரலாறு[தொகு]
தேவனஹள்ளியின் வரலாறு 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. காஞ்சியிலிருந்து தப்பி ஓடிய அகதிகளின் குடும்பம் நந்தி மலையின் கிழக்கே ராமசாமி பேட்டையின் அடிவாரத்தில் முகாமிட்டது. அவர்களின் தலைவரான ராணா பைரே கவுடா இந்த பிராந்தியத்தில் ஒரு குடியேற்றத்தை அமைப்பதற்கான ஒரு திட்டத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அவரும் அவரது மொராசு வொக்கலு குடும்பமும் அஹூதி என்ற சிறிய கிராமத்தில் குடியேறினர். இது பின்னர் அவதி என்று அழைக்கப்பட்டது. அவரது மகன் மல்ல பைரே கவுடா தேவனஹள்ளி, சிக்கா-பல்லபுரம், தொட்ட-பல்லபுரம் ஆகியவற்றை நிறுவினார். கர்நாடக மாநிலத்தின் தலைநகராக விளங்கும் பெங்களூரு நகரத்தை நிறுவியவராக இவர் கருதப்படும் கெம்பெ கவுடா இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவராவார். [5]
தேவனஹள்ளி கங்கவாடியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், இராஷ்டிரகூடர், நோலம்பர், பல்லவர்கள், சோழர்கள், போசளர்கள் , விஜயநகரப் பேரரசு போன்ற ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. விஜயநகர ஆட்சியின் போது, மல்ல பைரே பொ.ச. 1501இல் தேவனள்ளியின் முந்தைய பெயரான தேவனதொட்டியில் தேவராயரின் ஒப்புதலுடன் ஒரு மண் கோட்டையை கட்டினார். பொ.ச. 1747இல், கோட்டை நஞ்ச ராஜாவிடமிருந்து மைசூர் உடையார்களின் கைகளுக்கு சென்றது. இது மராட்டியர்களாலும் பல முறை கைப்பற்றப்பட்டது. பின்னர் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

திப்பு இதற்கு யூசுபாபாத் (மிகச்சிறந்த மனிதரான யூசுப்பின் தங்குமிடம்) என்று பெயர் மாற்றம் செய்தார்.[8] மைசூர் போரின் போது 1791இல் கார்ன்வாலிஸின் கீழ் கோட்டை ஆங்கிலேயரிடம் விழுந்தது.
திப்பு பிறந்த இடம்[தொகு]


கோட்டைக்கு வெளியே 150 மீ (160 யடி) தென்மேற்கில் உள்ள ஒரு தகடு ஒன்று 1751இல் திப்பு சுல்தான் இங்கு பிறந்தார் என்று குறிப்பிடுகிறது. [1][2][5][9]
இந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதி 'காஸ் பாக்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், இதைச் சுற்றி நீர் வற்றிய ஒரு குளமும், வாழை மரங்கள், புளி மற்றும் மாந்தோட்டங்களும் உள்ளன.
கோட்டையின் உள்ளே கோயில்கள்[தொகு]

படிமம்:Dravida sikhara over shrine in the Venugopalaswamy temple in the Devanahalli fort.jpg|தேவனஹல்லி கோட்டையில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோபுரம். கோட்டையின் சுவர்களைக் கொண்ட இந்தச் சிறிய நகரத்தில் பல கோயில்கள் உள்ளன. பிரதான நகர சாலையை எதிர்கொள்ளும் வேணுகோபாசுவாமி கோயில் அவற்றில் மிகப் பழமையான ஒன்றாகும். கோயிலின் கர்ப்பக்கிருத்தில் விஜயநகர பாணியில் விஷ்ணுவின் வடிவமான வேணுகோபாலனின் உருவம் உள்ளது. கோவிலுக்கு மேல் திராவிட பாணியிலான விமானமும் உள்ளது.
-
கோட்டையின் சுவர்கள்
-
-
-
-
-
-
-
-
Devenhalli Fort -
-
தேவனஹள்ளி கோட்டையின் ஒருகாட்சி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "A frozen moment of history". tipusultan.org இம் மூலத்தில் இருந்து 2009-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090131034819/http://tipusultan.org/even18.htm.
- ↑ 2.0 2.1 2.2 "A forgotten fort?". deccanherald. 11 March 2008 இம் மூலத்தில் இருந்து 6 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120406020105/http://archive.deccanherald.com/content/Mar112008/spectrum2008031056592.asp.
- ↑ "Around Nandi Hills". karnatakatourism.org இம் மூலத்தில் இருந்து 19 November 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081119161343/http://karnatakatourism.org/nature_arround_NandiHills.htm.
- ↑ Iyer, Meera (11 September 2013). "A tale of Bangalore and its four forts". Deccan Herald. http://www.deccanherald.com/content/357444/a-tale-bangalore-its-four.html.
- ↑ 5.0 5.1 5.2 "From Kempegowda to Tipu and now, BIAL". 6 Aug 2008. http://bangalore.citizenmatters.in/articles/view/320-from-kempegowda.
- ↑ "On another plane". The Telegraph (India). 20 March 2005. http://www.telegraphindia.com/1050320/asp/look/story_4510885.asp.
- ↑ "Alphabetical List of Monuments — Karnataka — Bangalore". http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_bangalore.asp.
- ↑ "Devanahalli:: Here, a star was born :: - Birthplace of Tipu Sultan". March 2005. http://ellakavi.wordpress.com/2006/10/21/devanahalli-here-a-star-was-born-birthplace-of-tipu-sultan/.
- ↑ "Brief History of Devanahalli" இம் மூலத்தில் இருந்து 2009-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090309130833/http://bangalorerural.nic.in/devanahalli.htm.