தேவனஹள்ளி

ஆள்கூறுகள்: 13°14′N 77°42′E / 13.23°N 77.7°E / 13.23; 77.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவனஹள்ளி
நகரம்
தேவனஹள்ளியின் காட்சி, கடிகார திசையிலிருந்து மேலே: திப்பு சுல்தான் பிறந்த இடம், கோட்டையிலிருந்து நகரம் ஒரு பார்வை, கோட்டையின் வெளிச்சுவர், கோட்டியின் உட்புறம்
தேவனஹள்ளியின் காட்சி, கடிகார திசையிலிருந்து மேலே: திப்பு சுல்தான் பிறந்த இடம், கோட்டையிலிருந்து நகரம் ஒரு பார்வை, கோட்டையின் வெளிச்சுவர், கோட்டியின் உட்புறம்
தேவனஹள்ளி is located in கருநாடகம்
தேவனஹள்ளி
தேவனஹள்ளி
கர்நாடகாவில் அமைவிடம்
தேவனஹள்ளி is located in இந்தியா
தேவனஹள்ளி
தேவனஹள்ளி
தேவனஹள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°14′N 77°42′E / 13.23°N 77.7°E / 13.23; 77.7
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெங்களூரு ஊரகம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்23,190
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுகேஏ-43

தேவனஹள்ளி (Devanahalli) தேவந்தஹள்ளி, தியாவந்தள்ளி, தேவனதொட்டி, தேவனபுரம் எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் ஊரக மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.[1] இந்த நகரம் பெங்களூரின் வடகிழக்கில் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. விமான நிலையத்தை ஒட்டியுள்ள கிட்டத்தட்ட 400 ஏக்கர் (1.6 கிமீ 2) பரப்பளவில் இரண்டு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களைக் கொண்ட பல பில்லியன் டாலர் வணிகப் பூங்கா உருவாகி வருகிறது. ஒரு விண்வெளிப் பூங்கா, அறிவியல் பூங்கா, 10 பில்லியன் டாலர் (140 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி நகரமும் வர உள்ளன.[2] ஒரு புதிய செயற்கைக்கோள் வளைய சாலை நகரத்தை தொட்டபல்லாபூருடன் இணைக்கும். தேவனஹள்ளி இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பிராந்தியமாக வரவிருக்கும் 1,500 பில்லியன் டாலர் (21 பில்லியன் அமெரிக்க டாலர்), 12,000 ஏக்கர் (49 கிமீ 2) பரப்பளவில் அமையவுள்ள பெயில் தகவல்தொழில்நுட்ப முதலீட்டு பிராந்தியத்திற்கு அருகில் அமைந்துள்ளது. [3]

இப்பகுதியில் மொத்த உள்கட்டமைப்பு மேம்பாடு அடுத்த இரண்டு ஆண்டுகளில், 4 20,450 பில்லியனாக (அமெரிக்க $ 290 பில்லியன்) அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வணிக மற்றும் குடியிருப்பு வளர்ச்சியுடன், அசையாச் சொத்துகளுக்கான தேவை உள்ளது. [4] "மைசூர் புலி" என்று பிரபலமாக அறியப்படும் திப்பு சுல்தானின் பிறப்பிடமாகும்.

வரலாறு[தொகு]

தேவநஹள்ளி கங்கவாடியின் ஒரு பகுதியாக இருந்தது , பின்னர் ராஷத்திரகுதாஸ், நோலம்பாஸ், பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சாலாக்கள் , விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

தேவனஹள்ளி கோட்டை

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[5] தேவனஹள்ளியில் 23,190 மக்கள் தொகை இருந்தது. ஆண்களில் மக்கள் தொகையில் 52%, பெண்கள் 48% ஆகும். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 66% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 73% ஆகவும் பெண் கல்வியறிவு 58% எனவும் இருக்கிறது. நகரின் 12% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.

சுற்றுலா[தொகு]

தேவனஹள்ளி பெங்களூரிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்திலுள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வழங்கிய உந்துதலால் சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தேவனஹள்ளி கோட்டையில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில், விஜயநகரப் பேரரசு காலத்துக்குப் பிந்தையது

20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேவனஹள்ளி கோட்டை, பன்னிரண்டு கோட்டைகளை உள்ளடக்கியது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆளும் வம்சங்களின் நினைவூட்டலாக இருக்கிறாது.[6]

கோட்டைக்குள் ஏராளமான கோயில்கள் உள்ளன. அனைத்து கோயில்களிலும், வேணுகோபால சுவாமி கோயில் அதிகம் பார்வையிடப்பட்டதும் பழமையானதும் ஆகும். இதன் முற்றம் விசாலமானது. கோயிலின் சுவர்கள் இராமாயணத்தின் பல்வேறு காட்சிகளை சித்தரிக்கின்றன. மேலும், தூண்களில் அழகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். அருகிலுள்ள சித்தலிங்கேஸ்வர சுவாமி கோயிலும் பிரபலமானது. மேலும், சந்திரமௌலீசுவரர் கோயில், நஞ்சுண்டேசுவரர் கோயில், வீரபத்ரசுவாமி கோயில், இரங்கநாதசுவாமி கோயில், காளம்மா கோயில், இராகவேந்திரசாமி மடம், மகாந்தா மடம், பாலகோபால சுவாமி கோயில் (பழையது), நாகரேசுவரர் கோயில், பசவேசுவரர் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன.[6] [7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் தேவனஹள்ளி பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவனஹள்ளி&oldid=3799066" இருந்து மீள்விக்கப்பட்டது