தேவகி ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவகி ஜெயின் (Devaki Jain) (பிறப்பு 1933) இவர் ஒரு இந்திய பொருளாதார நிபுணரும் மற்றும் எழுத்தாளருமாவார். இவர் முக்கியமாக பெண்ணிய பொருளாதாரத் துறையில் பணியாற்றியுள்ளார். சமூக நீதி மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புக்காக 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருது அவருக்கு வழங்கி கௌரவித்தது. [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜெயின் மைசூரில், பிறந்தார். இவரது தந்தை எம். ஏ. சீனிவாசன், ஒரு அரசு ஊழியர் சுதேச மாநிலமான குவாலியரின் திவானாக இருந்தார்.

கல்வி[தொகு]

ஜெயின் இந்தியாவின் பல்வேறு ஆங்கிலப் பள்ளிகளில் பயின்றார். ஆக்சுபோர்டில் உள்ள செயின்ட் அன்னேஸ் கல்லூரியிலும் பயின்றார். ஆக்சுபோர்டில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற இவர், பின்னர் 1969 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார்.   [ மேற்கோள் தேவை ]

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச வலையமைப்பு[தொகு]

சூன் 2011 இல் தேவகி ஜெயின்

வுமன் இன் இந்தியா என்ற தனது புத்தகத்தில் பணியாற்றிதன் மூலம், பெண்ணிய பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பெண்களை பற்ரி எழுதுதல், விரிவுரை செய்தல், வலைதள இணைப்பு, கட்டிடம், முன்னணி மற்றும் ஆதரவளிப்பதில் இவர் தீவிரமாக பங்கேற்றார். அதன் ஜெயின் புதுதில்லியில் உள்ள சமூக ஆய்வுகள் அறக்கட்டளையின் நிறுவனராகவும், 1994 வரை இயக்குநராக பணியாற்றினார். இவர் பெண்கள் வேலைவாய்ப்புத் துறையிலும் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் சர்வதேச மகளிர் ஆண்டிற்கான இந்திய பெண்கள் என்ற புத்தகத்தைத் எழுதியுள்ளார்.

காந்திய தத்துவம் இவரது பணியையும் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இந்த தத்துவத்திற்கு ஏற்ப, இவரது கல்வி ஆராய்ச்சி சமத்துவம், சனநாயக பரவலாக்கம், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் பெண்கள் உரிமைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தியுள்ளது. இவர் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச பெண்கள் இயக்கங்களுக்காக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது இந்தியாவின் பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஜெயின் பல வலைதளங்களில் மற்றும் மன்றங்களில் பங்கேற்பாளராக விரிவாகப் பயணம் செய்துள்ளார். ஆசியா-பசிபிக் ஐக்கிய நாடுகளின் மையத்திற்கான பாலினம் குறித்த ஆலோசனைக் குழுவின் தலைவராக, பெரும்பாலான பசிபிக் மற்றும் கரீபியன் தீவு உட்பட பல நாடுகளுக்கு வருகை புரிந்துள்ளார். ஆப்பிரிக்காவில், ஐர் மொசாம்பிக், தான்சானியா, கென்யா, நைஜீரியா, பெனின் மற்றும் செனகல், லைபீரியா, கோட் டி ஐவோயர், தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஜூலியஸ் நைரெருடன் சேர்ந்து, ஆப்பிரிக்க தலைவர்களின் தரிசனங்களையும் கவலைகளையும் சந்தித்து விவாதிக்கும் வாய்ப்பை இவர் பெற்றார். நைரேர் நிறுவிய முந்தைய தெற்கு ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

1997 ஆம் ஆண்டு வறுமை குறித்த மனித மேம்பாட்டு அறிக்கையைத் தயாரிப்பது குறித்தும், 2002 ஆம் ஆண்டு ஆளுகை அறிக்கை குறித்தும் ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் அமைத்த ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். குழந்தைகள் மீதான ஆயுத மோதலின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள சபையால் நியமிக்கப்பட்ட கிரேனா மச்செல் ஆய்வுக் குழுவின் முக்கிய நபர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

கல்வி வாழ்க்கை[தொகு]

தென்னாப்பிரிக்கா குடியரசின் டர்பன்-வெஸ்ட்வில் பல்கலைக்கழகத்தில் ஜெயினுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (1999) வழங்கப்பட்டது. பெய்ஜிங் உலக மாநாட்டில் யு.என்.டி.பி யிலிருந்து பிராட்போர்டு மோர்ஸ் நினைவு விருதையும் (1995) பெற்றார். இவர் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கான ஆய்வு நிறுவனம், (1993) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகம் (1984) ஆகியவற்றுடன் இணைந்த ஒரு ஃபுல்பிரைட் மூத்த சக ஊழியராக இருந்தார். இவர் கர்நாடக அரசின் மாநில திட்டமிடல் வாரியத்தில் ஒரு சக உறுப்பினராகவும், பல்கழைக்கழக மானியக்குழுவின் பெண்கள் ஆய்வுகள் தொடர்பான நிலைக்குழுவின் உறுப்பினராகவும், ஜூலியஸ் நைரேர் தலைமையில் தென் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 2013-14 கல்வியாண்டில் , ஆக்சுபோர்டில் உள்ள செயின்ட் அன்னேஸ் கல்லூரியில் தான் படித்த கல்லூரியில்ல் ப்ளூமர் வருகை ஊழியராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் காந்திய பொருளாதார நிபுணர் இலட்சுமி சந்த் ஜெயின் என்பவரை 1966 இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் சீனிவாசன் ஜெயின் என்பவர் என்டிடிவி நிருபராக இருக்கிறார்

குறிப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகி_ஜெயின்&oldid=3315107" இருந்து மீள்விக்கப்பட்டது