தேவகடத் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவகோட் தாலுகா கூட்டுறவு விவசாயிகளின் அல்போன்சா மாம்பழம்
வித்தியாதுர்க கோட்டை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சா மாம்பழம்

தேவகாட் தாலுகா (Devgad taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் தேவகோட் ஆகும். அரபுக் கடலை ஒட்டி அமைந்த தேவ்கோட் தாலுகாவில் சிறுதுறைமுகம் உள்ளது. [2] அல்போன்சா மாம்பழ விளைச்சலைக்கு பெயர் பெற்றது.2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 98 வருவாய் கிராமங்களை கொண்டது.[3] இத்தாலுகா அல்போன்சா மாம்பழம் ஏற்றுமதி, மீன்பிடி துறைமுகம், காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கு பெயர் பெற்றது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,49,335 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 124,446 மற்றும் பெண்கள் 124,889 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 42129 - 17% ஆகும். சராசரி எழுத்தறிவு 63.04% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 9,421 மற்றும் 49,930 ஆகவுள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.42%, இசுலாமியர்கள் 4.41% மற்றும் பிறர் 0.17% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[4]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், தேவ்காட் தாலுகா taluka (1981–2010, extremes 1944–2006)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.4
(97.5)
36.9
(98.4)
39.2
(102.6)
37.2
(99)
38.0
(100.4)
37.2
(99)
32.4
(90.3)
33.0
(91.4)
32.9
(91.2)
36.6
(97.9)
36.3
(97.3)
35.2
(95.4)
39.2
(102.6)
உயர் சராசரி °C (°F) 30.8
(87.4)
30.8
(87.4)
31.4
(88.5)
32.2
(90)
33.4
(92.1)
31.0
(87.8)
29.2
(84.6)
28.7
(83.7)
29.4
(84.9)
31.3
(88.3)
32.6
(90.7)
31.7
(89.1)
31.0
(87.8)
தாழ் சராசரி °C (°F) 19.6
(67.3)
20.2
(68.4)
22.5
(72.5)
24.5
(76.1)
26.2
(79.2)
24.4
(75.9)
23.8
(74.8)
23.4
(74.1)
23.0
(73.4)
23.3
(73.9)
21.8
(71.2)
20.5
(68.9)
22.8
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F) 15.4
(59.7)
16.2
(61.2)
18.4
(65.1)
19.7
(67.5)
19.4
(66.9)
17.8
(64)
18.0
(64.4)
17.3
(63.1)
17.3
(63.1)
15.5
(59.9)
14.1
(57.4)
14.5
(58.1)
14.1
(57.4)
மழைப்பொழிவுmm (inches) 0.0
(0)
0.0
(0)
0.0
(0)
2.6
(0.102)
76.9
(3.028)
791.9
(31.177)
786.4
(30.961)
547.5
(21.555)
270.0
(10.63)
70.1
(2.76)
13.7
(0.539)
0.2
(0.008)
2,559.3
(100.76)
ஈரப்பதம் 61 63 68 68 70 81 86 87 83 77 67 60 73
சராசரி மழை நாட்கள் 0.0 0.0 0.0 0.3 2.5 17.9 23.1 23.9 13.3 4.1 1.2 0.1 86.3
ஆதாரம்: India Meteorological Department[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tehsils of Sindudurg District
  2. "DEVGAD LIGHTHOUSE" (PDF). ww.dgll.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  3. Villages and Towns of Devgad Taluka
  4. Devgadbaria Taluka Population, Caste, Religion Data
  5. "Station: Devgad (Devgarh) Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 237–238. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  6. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M142. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகடத்_தாலுகா&oldid=3369587" இலிருந்து மீள்விக்கப்பட்டது