தேள் கொடுக்கி
Appearance
தேள் கொடுக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | (unplaced)
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. indicum
|
இருசொற் பெயரீடு | |
Heliotropium indicum L | |
வேறு பெயர்கள் | |
Heliophytum indicum |
தேள் கொடுக்கி (HELIOTROPIUM INDICUM; ஆனை வணங்கி) ஆசியா[1] கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இத்தாவரம் மற்றத் தாவரங்களின் ஊடே வருடாவருடம் களையாக முளைக்கும் தன்மைகொண்டது. இவை 15 செ.மீற்றர்கள் முதல் 50 செ. மீற்றர்கள் வரை வளரும் தன்மைகொண்டது. இதன் தண்டுப்பகுதி முடிகள் அடர்ந்து நீள் சதுரவடிவில் முட்டைபோன்ற இலைகளைக்கொண்டு காணப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் சிறியதாகவும் பச்சை புள்ளிகளைக்கொண்டும், ஐந்து மகரந்த பைகள் அல்லிவட்டத்தில் சேர்ந்தும் காணப்படுகிறது. மேலும் இதன் பூவின் வடிவம் ஒரு முனைப் பாணியுடன் நான்கு கூரிய கருப்பையுடன் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Trompang elepante". Philippine Medicinal Plants.
- ↑ Fu, P.P., Yang, Y.C., Xia, Q., Chou, M.C., Cui, Y.Y., Lin G., "Pyrrolizidine alkaloids-tumorigenic components in Chinese herbal medicina and dietary supplements", Jornal of Food and Drug Analysis, Vol. 10, No. 4, 2002, pp. 198-211 [1]