தேளின் மனிதப் பயன்பாடுகள்
தேளின் மனிதப் பயன்பாடுகள் (Human uses of scorpions) பல உள்ளன. மனிதர்கள் தேளினை மருந்து, உணவு மற்றும் செல்லப் பிராணியாகவும், கடவுளாகவும், தீங்குகளைத் தடுக்கவும், அல்லது வியாபாரத்துடன் தொடர்புடைய அல்லது வியாபார பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
நடைமுறை பயன்கள்
[தொகு]மருத்துவம்
[தொகு]குறுகிய சங்கிலி தேள் நச்சுகள் பொட்டாசியம் (K+) கால்வாய்-தடுக்கும் பெப்டைட்களின் மிகப்பெரிய குழுவாக உள்ளது. கேவி 1.3 என அழைக்கப்படும், முக்கிய உடலியல் வினைப்பாதயான KCNA3ல் அயனி போக்குவரத்தில் மின் செறிவினை நிலைநிறுத்தி Ca 2+ போக்குவரத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. இது தைமயசு நிணநீர்க் குழிய (ஒரு வகை டி உயிரணு) பெருக்கத்தில் பங்குவகிக்கின்றது. எனவே கே வி 1.3 தடுப்பான்கள் தன்னுடல் நோய்களுக்கு (உ.ம். முடக்கு வாதம், குடல் அழற்சி நோய் மற்றும் தண்டுவட மரப்பு நோய்) எதிர்ப்புக் காரணியாக சிகிச்சையளிப்பதற்கான சாத்தியமான நோயெதிர்ப்பு சக்திகளாக உள்ளன.[2] யூரோப்ளெக்டெசு லீனேயாட்சு விஷம் தோல் மருத்துவத்தில் முக்கியமானதாக உள்ளது.[3]
மருத்துவ பயன்பாட்டிற்காகப் பல தேள் விச நச்சுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. டெத்ஸ்டாக்கர் தேளிலிருந்து (லியுரசு குயின்வெஸ்ட்ரியாட்டசு) குளோரோடாக்சின் நச்சு குளோரைடு உடல் செயல் பாதயினைத் தடுக்கிறது.[1][4] துனிசிய ஸ்கார்பியோ மாரசின் விஷத்திலிருந்து வரும் மரோடாக்சின் பொட்டாசியம் வழித்தடத்தினைத் தடுக்கிறது.[5] மெசோபூதசு யூபியசின் விசத்தில் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் சில பெப்டைடுகள் உள்ளன. இவை மியூசின் -13 மற்றும் மியூசின் -18 ஆகும். இவை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட்களில் உயிரணுக்களைச் சிதைக்க வல்லது.[6] மேலும் மியூசின் -24 மற்றும் மியூசின் -25 ஆகியவை மலேரியா நோய்க்காரணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தைத் அழிப்பதுடன் பிளாஸ்மோடியம் பெர்கேயின் பெருக்கத்தைத் தடுக்கின்றன, அதே நேரத்தில் பாலூட்டிகளின் உயிரணுக்களில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.[7]
உணவு
[தொகு]சீனாவின் சாங்டாங்கில் தேளினை வறுத்து உண்ணுகின்றனர். இது பாரம்பரியமாக நடைபெறும் செயலாகும்.[8]
செல்லப்பிராணிகளாக
[தொகு]சில நேரங்களில் செல்லப்பிராணிகளாகத் தேள் வளர்க்கப்படுகிறது. பாம்புகள் மற்றும் டரான்டுலா சிலந்திகள் போன்ற ஆபத்தான விலங்குகளை வளர்ப்பதைப் போலவே இதுவும் வளர்க்கப்படுகிறது. பிரபல அறிவியல் மாத இதழ் பாப்புலர் சயன்சு 1899ஆம் ஆண்டில் "என் செல்லப்பிராணி தேள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.[9]
குறியீட்டு பயன்கள்
[தொகு]மத்திய கிழக்கு கலாச்சாரம்
[தொகு]தேள் கலாச்சார ரீதியாக ஒரு குறிப்பிடத்தக்க விலங்கு. பலவித கலைகளில் இது ஒரு மையக்கருவாக தோன்றுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் இசுலாமியக் கலையில் இதனை நாம் காணலாம்.[10] பெரும்பாலும் துருக்கி கிளிம் பிளாட்-நெசவு கம்பளங்களில் தேளின் உருவம் நெய்யப்படுகிறது. தேளின் கடியிலிருந்து பாதுகாப்பிற்காக இவ்வாறு நெய்யப்படுவதாக ஒரு நம்பிக்கை. தேள் தீய மற்றும் பாதுகாப்பு சக்தியின் (தர்வேசு) உள்ளடக்கமாக இரண்டு பொருண்மையில் கருதப்படுகிறது. மற்றொரு சூழலில், தேள் மனித பாலுணர்வைச் சித்தரிக்கிறது. தெற்காசியாவில் நாட்டுப்புற மருத்துவத்தில் தேள் பயன்படுத்தப்படுகிறது. இது தேள் கடியின் மாற்று மருத்துவத்தில் பயன்படுகிறது.
புது பாபிலோனியப் பேரரசு காலத்தில் தேள் தோன்றிய ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்று, நளி (இராசி), பாபிலோனிய வானியலாளர்களால் இராசிச் சக்கரம் 12-ல் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், செர்கெட் தெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு தேள் எனக் சித்தரிக்கப்பட்டது. பார்வோனைப் பாதுகாத்த பல தெய்வங்களில் தேளும் ஒன்று.[11]
சர்ப்பங்களுடன், தேள் புதிய ஏற்பாட்டில் தீமையைக் குறிக்கப் பயன்படுகிறது. லூக்கா 10: 19 ல் எழுதப்பட்டுள்ளது, "இதோ, பாம்புகள் மற்றும் தேள்களிலும், எதிரியின் எல்லா சக்தியிலும் மிதித்துச் செல்வதற்கான சக்தியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; எதுவும் உங்களைத் துன்புறுத்தாது." இங்கே, தேள் மற்றும் பாம்புகள் தீமையைக் குறிக்கின்றன.[12] வெளிப்படுத்துதல் 9: 3 "பூமியில் தேள்களின் சக்தி" பற்றிப் பேசுகிறது.[13]
-
வேண்கலக் கால ஆரம்பத்தில் ஜிரோப்ட் கலச்சாரத்தில் விளையாடு பலகையில் தேள் (ஈரான்)
-
தொண்மை எகிப்து பெண் கடவுள் சேர்கெட், எடுபு கோயில், எகிப்து[11]
-
துருக்கி கிலிம் தரைவிரிப்பில், தேள் குறித்த மைய கருத்து (இரண்டு வகைகள்). தேள் கடியிலிருந்து பாதுகாப்பு எனும் நம்பிக்கை.[14]
மேற்கத்திய கலாச்சாரம்
[தொகு]பல்வேறு தயாரிப்புகளிலும், வியாபார முத்திரைகளிலும் தேளின் கொடுக்கு சக்தியின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் அபார்த் பந்தய வாகனங்கள் உட்பட பல்வேறு தயாரிப்புகளின் பெயர் அல்லது அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[15] உரோமானிய இராணுவத்தில், ஸ்கார்பியோ என்பது பொருளைச் சுடப் பயன்படுத்தப்படும் ஒரு முற்றுகை இயந்திரமாகும்.[16] பிரித்தானிய இராணுவத்தின் எப் வி 101 ஸ்கார்பியன் என்பது 1972 முதல் 1994 வரை சேவையிலிருந்த ஒரு கவச உளவு வாகனம் அல்லது எளிய ரக பீரங்கி வண்டியாகும்.[17] இது மிக விரைவான உற்பத்திசெய்யப்பட்ட வாகனமாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.[18] சுரங்கங்களைத் துடைக்க ஒரு ஃபிளெயில் பொருத்தப்பட்ட மாடில்டா II பீரங்கி மாடில்டா ஸ்கார்பியன் என்று பெயரிடப்பட்டது. அரச கடற்படையின் பல கப்பல்களுக்கு எச்.எம்.எஸ் ஸ்கார்பியன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 1803 இல் 18-துப்பாக்கி சுலூப் 1863 இல் ஒரு சிறு கோபுரம் கப்பல் மற்றும் 1910 இல் ஒரு அழிப்பான்[19] அடங்கும். நவீன யோகாவில் ஒரு கை- அல்லது முன்கை சமநிலைப்படுத்தும் ஆசனம் பின்புற வளைவுடன் உடற்பயிற்சி மற்றும் ஒன்று அல்லது இரண்டு கால்களும் தலைக்கு மேல் முன்னோக்கிச் சுட்டிக்காட்டுவது விருச்சிகாசனம் என்று அழைக்கப்படுகிறது.[20] ஸ்கார்பியன் கிங் என்ற தலைப்பில் பலவிதமான தற்காப்புப் கலைப் படங்கள் மற்றும் காணொளி விளையாட்டுகள் வந்துள்ளன.[21][22][23] ஒரு மான்டேசா ஸ்க்ராம்ப்ளர் விசையுந்திற்குத் தேள் (ஸ்கார்பியன்) என்று பெயரிடப்பட்டது.[24]
திரைப்படம் மற்றும் கவிதை உள்ளிட்ட மேற்கத்தியக் கலைப்படைப்புகளில் தேள் பிற விலங்குகளைப்போல் அதிகமாகத் தோன்றியுள்ளது. அடிமன வெளிப்பாட்டியம் திரைப்படத் தயாரிப்பாளர் லூயிஸ் புனுவேல் 1930ஆம் ஆண்டில் தன்னுடைய பழமையான திரைப்படமான எல் ஏஜ் டி (தி கோல்டன் ஏஜ்)இல் தேளினை அடையாளமாகப் பயன்படுத்தியுள்ளார்.[25] ஸ்டீவி ஸ்மித்தின் கடைசி கவிதைத் தொகுப்பு ஸ்கார்பியன் மற்றும் பிற கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்தது.[26]
-
எலிசபெட்டா கோஜ்சாக மார்பளவு சிலை, ராபியேல், c. 1504
-
"துலாம்]] & விருச்சிகம்". நட்சத்திர படம், ஜான் பிளேம்சுடீடு, 1776
-
இத்தாலி காலணி: விக்டர் இம்மானுவேல் இரண்டு, இத்தாலிய அரசர் காலணியினை குலுக்குகிறார். உள்ளிருந்து ஜிசொப்பி மாசினி
-
தேள் தவளையுடன் வாழ்க்கை - கெர்மென்கிளிடோ பசுடோசு, 1874
-
எச் எம் எஸ் இசுகார்பியோ, 1953
-
தேள் பீரங்கி[17]
-
விருச்சிகாசனம்[20]
-
1975 மோடிசா, அரச தேள் மோட்டர் சைக்கிள்
பிற கலாச்சாரங்கள்
[தொகு]பெருவின் மோச்சே கலாச்சார கலையில் வடிவமைக்கப்பட்ட பல விலங்குகளில் தேளும் அடங்கும்.[27] நியூ மெக்சிகோவின் தெற்கில் உள்ள மிம்பிரெஸ் கலைஞர்கள் மட்பாண்டங்களின் தேளினை வண்ணமாகத் தீட்டுகின்றனர். புராண விலங்குகளை இறுதிச் சடங்குகளில் உருவாக்கினர். ஒரு இறுதிச் சடங்கின் போது அவற்றை "கொல்ல" கிண்ணத்தின் அடிப்பகுதியில் துளையிட்டனர்.[28]
-
கிமு 6 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை பெருவில் உள்ள கில்டட் செம்புகளில் மோச் தேள் ஆபரணம்
-
மொகொல்லன் (மிம்பிரெஸ்) பீங்கான் தேள் கிண்ணம், நியூ மெக்சிகோ, கி.பி 950-1150
-
தேள் மற்றும் சென்டிபீட் கொண்ட தங்க ஆபரணம், கிங்யாங், சீனா
-
கஜகஸ்தான் தபால்தலை மீது அனோமலோபூதஸ் ரிக்மெர்சி, 1997
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 DeBin, J. A.; G. R. Strichartz (1991). "Chloride channel inhibition by the venom of the scorpion Leiurus quinquestriatus". Toxicon 29 (11): 1403–1408. doi:10.1016/0041-0101(91)90128-E. பப்மெட்:1726031. https://archive.org/details/sim_toxicon_1991_29_11/page/1403.
- ↑ Chandy, K. George; Heike Wulff; Christine Beeton; Michael Pennington; George A. Gutman; Michael D. Cahalan (May 2004). "K+ channels as targets for specific immunomodulation". Trends in Pharmacological Sciences 25 (5): 280–289. doi:10.1016/j.tips.2004.03.010. பப்மெட்:15120495.
- ↑ Rapini, Ronald P.; Bolognia, Jean L. (2007). Dermatology: 2-Volume Set.
- ↑ Deshane, Jessy; Craig C. Garner; Harald Sontheimer (2003). "Chlorotoxin inhibits glioma cell invasion via matrix metalloproteinase-2". Journal of Biological Chemistry 278 (6): 4135–4144. doi:10.1074/jbc.M205662200. பப்மெட்:12454020.
- ↑ Carlier, E.; S. Geib; M. De Waard; V. Avdonin; T. Hoshi; Z. Fajloun; H. Rochat; J.-M. Sabatier et al. (2000). "Effect of maurotoxin, a four disulfide-bridged toxin from the chactoid scorpion Scorpio maurus, on Shaker K+ channels". The Journal of Peptide Research 55 (6): 419–427. doi:10.1034/j.1399-3011.2000.00715.x. பப்மெட்:10888198.
- ↑ Gao, Bin; Patrick Sherman; Lan Luo; John Bowie; Shunyi Zhu (2009). "Structural and functional characterization of two genetically related meucin peptides highlights evolutionary divergence and convergence in antimicrobial peptides". FASEB Journal 23 (4): 1230–1245. doi:10.1096/fj.08-122317. பப்மெட்:19088182. https://archive.org/details/sim_faseb-journal_2009-04_23_4/page/1230.
- ↑ Gao, Bin; Jia Xu; Maria del Carmen Rodriguez; Humberto Lanz-Mendoza; Rosaura Hernández-Rivas; Weihong Du; Shunyi Zhu (2010). "Characterization of two linear cationic antimalarial peptides in the scorpion Mesobuthus eupeus". Biochimie 92 (4): 350–359. doi:10.1016/j.biochi.2010.01.011. பப்மெட்:20097251.
- ↑ Forney, Matthew (June 11, 2008). "Scorpions for Breakfast and Snails for Dinner". The New York Times.
- ↑ 9.0 9.1 Robinson, Norman (1899). "My pet scorpion". Popular Science Monthly 54: 605–613. https://archive.org/details/popularsciencemo54newy/page/608/mode/2up/search/whip.
- ↑ Frembgen, Jürgen Wasim (2004). "The scorpion in Muslim folklore". Asian Folklore Studies 63 (1): 95–123. http://nirc.nanzan-u.ac.jp/nfile/631.
- ↑ 11.0 11.1 "Pharaonic Gods". Egyptian Museum. 13 May 2008. Archived from the original on 13 May 2008.
- ↑ Pulpit Commentary on Luke 10, accessed 29 October 2018
- ↑ 9:3 NKJV:{{{4}}}
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ "Abarth Logo: Design and History". Famouslogos.net. Archived from the original on 11 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2011-07-28.
- ↑ 16.0 16.1 Vitruvius, De Architectura, X:10:1-6.
- ↑ 17.0 17.1 "FV101 Scorpion: Keeping the Light Tank Relevant". HistoryNet. பார்க்கப்பட்ட நாள் 23 June 2020.
- ↑ "Fastest tank". Guinnessworldrecords.com. 26 March 2002. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
- ↑ தி டைம்ஸ் (London), Wednesday, 31 August 1910, p. 5
- ↑ 20.0 20.1 YJ Editors; Budig, Kathryn (1 October 2012). "Kathryn Budig Challenge Pose: Scorpion in Forearm Balance". Yoga Journal. https://www.yogajournal.com/practice/vrischika-in-pincha-mayurasana.
- ↑ Wallis, J. Doyle (2004). "Operation Scorpio". DVD Talk. பார்க்கப்பட்ட நாள் 2015-06-19.
- ↑ "The Scorpion King". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2010.
- ↑ Provo, Frank (2002). "The Scorpion King: Sword of Osiris Review". GameSpot. பார்க்கப்பட்ட நாள் 24 June 2020.
- ↑ Salvadori, Clement (17 January 2019). "Retrospective: 1974-1977 Montesa Cota 247-T". Rider Magazine. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
Permanyer persisted, built larger engines, and in 1965 showed the 247cc engine (21 horsepower at 7,000 rpm) in a Scorpion motocrosser.
- ↑ Weiss. Dada and Surrealist Film. MIT Press.
- ↑ "Stevie Smith: Bibliography". Poetry Foundation. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.
- ↑ "Scorpion ( Accession Number: 1981.459.5)". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 28 June 2020.
- ↑ "Bowl, Scorpions". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 28 June 2020.