தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் (Thervoy Kandigai reservoir) இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட ஐந்தாவது பெரிய நீர்த்தேக்கமாகும்.[1] திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணங்கோட்டை ஏரிகளை இணைத்து இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் சாவால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 2021 மார்ச் மாதம் 11 அன்று முதல் முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. [2]

வரலாறு[தொகு]

சென்னை மாநகரின் பெருகி வரும் குடிநீர் தேவையை தீர்க்க 2012 ஆம் ஆண்டு தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.[3] திருவள்ளூர் மாவட்டத்தில் 1485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 380 கோடி ரூபாய் மதிப்பில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டதால் இந்த திட்டம் நிறைவேற தாமதமானது [4] பின்னர் 2018 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் தொடங்கப்பட்டது [5]

நோக்கம்[தொகு]

கிருட்டிணாவிலிருந்து வரும் உபரி நீரை கண்டலேறு-பூண்டி கால்வாயில் சேமிப்பதற்காக இந்த நீர்த்தேக்கம் திட்டமிடப்பட்டது.[6] 8.6 கி.மீ நீளமுள்ள ஒரு கால்வாய் அக்கால்வாயில் இருந்து தண்ணீர் எடுக்க கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் 1 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும் [7]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பெ,வி.ஶ்ரீனிவாசுலு, ஜெயகுமார் த,ராகேஷ். "புதிய தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம்... சென்னைக்கு தேவையே இல்லை எனும் மூத்த பொறியாளர்... ஏன்?" (ta).
  2. "Thervoy Kandigai reservoir fills up". The Hindu. 11 March 2021. https://www.thehindu.com/news/cities/chennai/thervoy-kandigai/article34039621.ece. 
  3. "தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!" (2020-11-22).
  4. "Amit Shah to inaugurate 5th reservoir for Chennai on November 21 | Chennai News - Times of India".
  5. "Chennai's new source of water: Five things to know about Thervoy Kandigai reservoir" (November 20, 2020).
  6. "அன்று பூண்டி… இன்று தேர்வாய் கண்டிகை!" (ta).
  7. "76 ஆண்டுகளுக்கு சென்னைக்கு புதிய ஏரி... தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தின் சிறப்பம்சங்கள்" (November 21, 2020).