உள்ளடக்கத்துக்குச் செல்

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், தேத்தாங்கால் ஊராட்சியில் உள்ள கண்மாயில் அமைந்துள்ள ராம்சர் ஈர நிலமாகும். 2010ஆம் ஆண்டில் தேர்தங்கல் கண்மாய் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இது இராமநாதபுரத்திற்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும்; பரமக்குடிக்குடிக்கு தென்கிழக்கே 32 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தமிழகத்தில், 18 ராம்சார் பகுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 ராம்சார் நிலங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்தங்கல் கண்மாய் மற்றும் சக்கரக்கோட்டை கண்மாய்கள் ராம்சர் ஈர நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1] குளிர்காலத்தில் இவ்விரு கண்மாய்கள் வெளிநாட்டுப் பறவைகளின் சரணாலயமாக உள்ளது.[2] இப்பகுதி பறவைகள் சரணாலயங்களாக மட்டுமின்றி, பல்லுயிர் இனப்பெருக்கம் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]