உள்ளடக்கத்துக்குச் செல்

தேரா புக்தி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரா புக்தி மாவட்டம்
ضلع ڈیرہ بگٹی
ڈئره بگٹیءِ دمگ
மாவட்டம்
தேரா புக்தி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கு
தேரா புக்தி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கு
பலூசிஸ்தான் மாகாணத்தில் தேரா புக்தி மாவட்டத்தின் அமைவிடம்
பலூசிஸ்தான் மாகாணத்தில் தேரா புக்தி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
கோட்டம்சிபி
நிறுவிய ஆண்டுசூலை 1983
தலைமையிடம்தேரா புக்தி
அரசு
  வகைமாவட்ட நிர்வாகி
பரப்பளவு
  மாவட்டம்10,160 km2 (3,920 sq mi)
மக்கள்தொகை
 (2023)
  மாவட்டம்3,55,274
  அடர்த்தி35/km2 (91/sq mi)
  நகர்ப்புறம்
1,08,447
  நாட்டுப்புறம்
2,46,827
எழுத்தறிவு
  எழுத்தறிவு24.07%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வட்டங்கள்5

தேரா புக்தி மாவட்டம் (Dera Bugti District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தேரா புக்தி நகரம் ஆகும். தேரா புக்தி நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கே 363கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 944 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

தேரா புக்தி மாவட்டத்தின் வடக்கில் கொலு மாவட்டம், கிழக்கில் பஞ்சாப் மாகாணம், தெற்கில் சோபத்பூர் மாவட்டம், தென்மேற்கில் சிபி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

தேரா புக்தி மாவட்டம் 5 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வருவாய் வட்டம்[2] பரப்பளவு

(km²)[3]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

சராசரி எழுத்தறிவு

(2023)[4]

ஒன்றியக் குழுக்கள்
தேரா புக்தி வட்டம் 927 50,943 54.95 33.75% ...
பெலாவாக் வட்டம்[5] ... ... ... ... ...
சூய் வட்டம்[5] 3,858 126,725 32.85 ...
பைக்கெர் வட்டம் 258 33,410 129.50 15.62% ...
பிர்கோ வட்டம்[5] ... ... ... ... ...

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,267 குடியிருப்புகள் கொண்ட தேரா புக்தி மாவட்டத்தின் மக்கள் தொகை 3,55,274 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 121.10 ஆண்கள் வீதம் உள்ளனர்.[6][7]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 152,457 (42.91%) ஆக உள்ளனர்.[8] 108,447 (30.52%) மக்கள் நகர்புறஙகளில் வாழ்கின்றனர். [6]

சமயம்

[தொகு]

இதன் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இசுலாமியர்கள் ஆவார். சமயச் சிறுபான்மையினரான இந்து மற்றும் கிறித்தவர்கள் 1,843 (0.52%) ஆக உள்ளனர்.[9]

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் 98.94% பேர் பலூச்சி மொழியை பேசுகின்றனர்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்
  3. "Wayback Machine" (PDF). www.pbs.gov.pk.
  4. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
  5. 1 2 3 "District And Tehsil Level Population Summary - Dera Bugti District (2017 Census of Pakistan)" (PDF). Pakistan Bureau of Statistics, Government of Pakistan website. Archived from the original (PDF) on 20 December 2018. Retrieved 3 March 2024.
  6. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  9. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  10. "Wayback Machine" (PDF). www.pbs.gov.pk.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரா_புக்தி_மாவட்டம்&oldid=4305527" இலிருந்து மீள்விக்கப்பட்டது