தேரா காசி கான் மாவட்டம்
தேரா காசி கான் மாவட்டம்
ضلع ڈيره غازى خان ضلع دیرہ غازی خان | |
|---|---|
மாவட்டம் | |
மேலிருந்து கீழ்: முல்லா காயித் ஷா கல்லறை, சுலைமான் மலைத்தொடர் | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தேரா காசி கான் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் |
| தலைமையிடம் | தேரா காசி கான் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 3,814 km2 (1,473 sq mi) |
| மக்கள்தொகை (2023)[2] | |
| • மாவட்டம் | 23,48,245 |
| • அடர்த்தி | 620/km2 (1,600/sq mi) |
| • நகர்ப்புறம் | 5,85,875 (24.95%) |
| • நாட்டுப்புறம் | 17,62,370 (75.05%) |
| எழுத்தறிவு | |
| • சராசரி எழுத்தறிவு |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 064 |
| வருவாய் வட்டங்கள் | 3 |
| இணையதளம் | dgkhan |
தேரா காசி கான் மாவட்டம் (Dera Ghazi Khan), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தேரா காசி கான் நகரம் ஆகும். தேரா காஜி கான் நகரம், மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 438 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 639 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கே சிந்து ஆறு பாய்கிறது. இம்மாவட்டத்தின் வடக்கில் சுலைமான் மலையின் கொடுமுடி 10,000 அடிகள் (3,000 m) உயரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் முன்ரோ மலைக்கோட்டை மற்றும் யேக்பாய் மலைவாழிடம் சிறந்த சுற்றுலாத் தளங்களாகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]தேரா காசி மாவட்டத்தின் வடக்கில் தௌன்சா மாவட்டம், கிழக்கில் முசாபர்கர் மாவட்டம், தெற்கில் இராஜன்பூர் மாவட்டம், மேற்கில் பலூசிஸ்தான் மாகாணமும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 292,658 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 23,48,245 ஆகும்.[4]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.71 ஆண்கள் வீதம் உள்ளனர்.[2][3] சராசரி எழுத்தறிவு 43.98% ஆகும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,97,634 (34.06%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 649,290 (27.65%) மக்கள் வாழ்கின்றனர்.[2]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் 99.62%, இந்து சமயம் உள்ளிட்ட பிற சமயத்தினர் 0.38% உள்ளனர்.[6]
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் சராய்கி மொழி 87.90% மக்களும், பலூச்சி மொழி 7.68% மக்களும், உருது மொழியை 3.40% மக்களும் பேசுகின்றனர்.[7]

மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 2 வருவாய் வட்டங்களையும்[8][9], 60 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[10]
| வருவாய் வட்டம்[11] | பரப்பளவு
(km²)[12] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[13] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| தேரா காசி கான் வட்டம் | 2,012 | 1,443,409 | 717.40 | 47.25% | 41 |
| கோட் சுட்டா வட்டம் | 1,802 | 904,836 | 502.13 | 38.61% | 24 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "D.G.Khan | Punjab Portal". Archived from the original on 2015-03-15. Retrieved 2025-07-26.
- 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by Sex, Religion and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics. 2023. Retrieved 2 Aug 2024.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Tehsils & Unions in the District of D.G. Khan – Government of Pakistan". Nrb.gov.pk. Archived from the original on 9 February 2012. Retrieved 24 March 2012.
- ↑ Pakistan Government – List of Tehsils பரணிடப்பட்டது 5 மார்ச் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tehsils & Unions in the District of D.G. Khan பரணிடப்பட்டது 9 பெப்ரவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).