தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்
திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்
திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°02′51″N 79°35′19″E / 11.0474°N 79.5887°E / 11.0474; 79.5887
பெயர்
புராண பெயர்(கள்):திருவழுந்தூர்
பெயர்:திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:தேரழுந்தூர் - 609808
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வேதபுரீசுவரர்,
அத்யாபகேசர்
தாயார்:சௌந்தராம்பிகை
தல விருட்சம்:சந்தன மரம்
தீர்த்தம்:வேதாமிர்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 38ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

இது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை வழிபடும் போது அதையறியாத மன்னன் வானவெளியில் செலுத்திய தேர் அழுந்திய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் வேதபுரீஸ்வரர்,இறைவி சௌந்தரநாயகி.

ஊரின் சிறப்பு[தொகு]

தேரழுந்தூர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். தமிழ்ச் சான்றோர் இரும்பிடர்த்தலையார் வாழ்ந்த தலம்.[1]

கோயில் அமைப்பு[தொகு]

நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். கோயிலின் வலப்புறம் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் திருச்சுற்றில் சொர்ண பைரவர், கால பைரவர், சூரியன், நவக்கிரகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் துர்க்கா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர், கைலாசநாதர், பாபஹரேஸ்வரர் காணப்படுகின்றனர். மூலவர் சன்னதியின் வெளியில் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், அருகில் வலஞ்சுழி விநாயகர் சன்னதியும் உள்ளன.மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 154,155

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]