தேயிலை மர எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெலலூகா ஆல்டர்னிஃபோலியா .தேயிலை மரம்
தேயிலை மர நடுகை நியூ சவுத் வேல்ஸ்

தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) அல்லது மெலலூகா எண்ணெய் என்பது நறுமண எண்ணெய் ஆகும். இது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து தெளிவான நிறம் வரையிலும் காணப்படுகின்றது.[1] தென்கிழக்கு குயின்லாந்து, மற்றும் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் வடகிழக்கு கடற்கரையில காணப்படும் மெலலூகா ஆல்டர்ன்போலியா எனும் தேயிலை மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது.

செயற்திறனுக்கான சிறிய அளவிலான சான்றுகள் இருந்தாலும் நாட்டுப்புற மருந்தாக குறைந்த செறிவுகளில் தோல் நோய்களுக்கான மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.[2][3][4]தேயிலை மர எண்ணெய் பொடுகு, முகப்பரு, பேன், அக்கி, பூச்சிக் கடி, சிரங்குகள், தோலில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகள் மற்றும் பாக்டிரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பயனுள்ள மருந்தாக கருதப்படுகின்றது.[3][4][5]இருப்பினும் இவற்றை ஆதரிப்பதற்கான சிறந்த  சான்றுகள் இல்லை.[3][6]தேயிலை மர எண்ணெய் காப்புரிமை பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருந்து இல்லை. [4]வாயினால் உட்கொள்ளப்பட்டால் நச்சாகும். மேலும் குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பற்றது.[7]

பயன்பாடுகள்[தொகு]

தேயிலை மர எண்ணெய் முகப்பரு, நகக்குட்டை (nail fungus), அல்லது பாதப்படை என்பவற்றிற்கு சிகிச்சையளிக்கிறது என்ற நம்பிக்கையில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[3][8][9]இதை ஆதரிக்க சிறிய அளவிலான சான்றுகளே உள்ளன. 2015 ஆம் ஆண்டின் கோக்ரேன் முறையான மதிப்பாய்வில் முகப்பருக்கான ஆறுதல் மருந்தாக மதிப்பிடப்பட்டது.[10] தேயிலை மர எண்ணெய் நகக்குட்டையை குணப்படுத்தும் பயனுள்ள மருந்தாக பரிந்துரைக்கப்படவில்லை.[11] தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குழந்தைகளின் தலை பேன்களுக்கு பயன்படுத்தும் பாதுகாப்பான மருந்தாக பரிந்துரைக்கப்படவில்லை.[9][12]

பாதுகாப்பு[தொகு]

தேயிலை மர எண்ணெயை உட்கொண்டால் விஷமாகும்.[3][6]இது மயக்கம், குழப்பம், பிரமைகள், கோமா, நிலையற்ற தன்மை, பலவீனம், வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், இரத்த அணுக்களின் அசாதாரணங்கள், சொறி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள், செல்லப்பிராணிகளிடம் இருந்து தூரமாக வைக்க வேண்டும்.[6]இந்த எண்ணெயை வாய் அல்லது வாய் சுற்றுப் பகுதிகளில் பயன்படுத்தக்கூடாது.[3][7]வாய்வழி உட்கொள்வதன் நச்சுத்தன்மையை எலிகளில் பரிசோதித்த போது எலிகளின் சராசரி மரணம்  (எல்.டி 50) 1.9–2.4 மில்லி / கிலோ ஆகும்.[13]

2006 ஆம் ஆண்டில் தேயிலை மர எண்ணெயின் நச்சுத்தன்மையைப் பற்றிய மதிப்பாய்வு தேயிலை மர எண்ணெயின் நீர்த்த வடிவம் வெளிப்புற பயன்பாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என்று முடிவுசெய்தது. (ஆக்சிஜனேற்றம் தவிர்க்கபடுகிறது)[9][14] தேயிலை மர எண்ணெயின் அதிக செறிவு மேற்பூச்சு பயன்பாட்டில் பாதகமான எதிர்விளைவுகளான தோல் எரிச்சல், ஒவ்வாமை, தோல் அழற்சி, லினர் இம்யூனோகுளோபின் ஏ டிசீஸ், எரித்மா மல்டிபார்ம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.[14][5]

வரலாறு[தொகு]

தேயிலை மரம் என்ற பெயர் பல தாவரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 1920 ஆம் ஆண்டுகளில் வர்த்தக தேயிலை மர எண்ணெய் தொழில் தோன்றியது. ஆஸ்திரேலியரான ஆர்தர் பென்ஃபோல்ட் என்பவர் பல பூர்வீக பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்களின் வணிக திறனை ஆராய்ந்தபோது தேயிலை மர எண்ணெய் கிருமிநாசினி என்று கண்டறிந்து அறிவித்தார்.[13]தேயிலை மர எண்ணெய் முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெலுகா ஆல்டர்னிபோலியாவிலிருந்து பிரித்தெடுக்கபட்டது. மேலும் இந்த இனம் வணிக ரீதியாக மிக முக்கியமானதாக உள்ளது. 1970, 1980 ஆண்டுகளில் தொழிற்சாலைகள் மெலலூகா ஆல்டர்னிஃபோலியா தோட்டங்களில் அதிக அளவு தேயிலை மர எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்கின. இவற்றின் பல தோட்டங்கள்  நியூ சவுத் வேல்ஸில் அமைந்துள்ளன.[13]மேலும் எண்ணெய் பிரித்தெடுப்புக்காக இந்த தாவரத்தின் பல இனங்கள் சேர்க்கப்பட்டு தொழில் விரிவடைந்தது.

ஆய்வுகள்[தொகு]

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க கேன்சர் சொசைட்டியின் கட்டுரையொன்றில் "பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் தேயிலை மர எண்ணெய் மனிதர்களுக்கான தோல் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதை  மருத்துவ சான்றுகள் ஆதரிக்கவில்லை" என தெரிவித்தது. [6]மேலும் தொடக்கநிலை ஆய்வுகளில் பொடுகு, முகப்பரு, நகக்குட்டை, பாதப்படை, சிரங்குகள் என்பவற்றிக்கு சிகிச்சையளிக்க பயன்படுவதாக கண்டறியப்பட்டாலும் குறைவான சான்றுகளே உள்ளன.[3][4][9] 2012 ஆம் ஆண்டில் தலை பேன் சிகிச்சைக்கான மறு ஆய்வு குழந்தைகளுக்கு தேயிலை மர எண்ணெய் பயன்படுத்துவதால் தோல் எரிச்சல், ஒவ்வாமை ஏற்படலாம் என்றது.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Essential oil of Melaleuca, terpene-4-ol (tea tree oil): ISO 4730: 2017 (E)". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 2. "Opinion on Tea tree oil" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Tea Tree Oil". NCCIH (in ஆங்கிலம்). 2011-11-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
 4. 4.0 4.1 4.2 4.3 "Therapeutic Potential of Tea Tree Oil for Scabies". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 5. 5.0 5.1 Pazyar, N; Yaghoobi, R; Bagherani, N; Kazerouni, A (July 2013). "A review of applications of tea tree oil in dermatology". International Journal of Dermatology. 52(7): 784–90. doi:10.1111/j.1365-4632.2012.05654.x. PMID 22998411.
 6. 6.0 6.1 6.2 6.3 Russell J, Rovere A, eds. (2009). "Tea Tree Oil". American Cancer Society Complete Guide to Complementary and Alternative Cancer Therapies (2nd ed.). American Cancer Society. ISBN 9780944235713.
 7. 7.0 7.1 "Tea tree oil". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 8. "CKS is only available in the UK". NICE. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
 9. 9.0 9.1 9.2 9.3 Mayo Foundation for Medical Education and Research, Mayo Clinic. 2017. Retrieved 2 December 2017. "Tea tree oil". Mayo Clinic (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-19. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: numeric names: authors list (link)
 10. Cao, H; Yang, G; Wang, Y; Liu, JP; Smith, CA; Luo, H; Liu, Y (19 January 2015). ""Complementary therapies for acne vulgaris"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
 11. Halteh P, Scher RK, Lipner SR (2016). "Over-the-counter and natural remedies for onychomycosis: do they really work?". Cutis. 98 (5): E16–E25. PMID 28040821.
 12. 12.0 12.1 Eisenhower, Christine; Farrington, Elizabeth Anne (2012). "Advancements in the Treatment of Head Lice in Pediatrics". Journal of Pediatric Health Care. 26 (6): 451–61, quiz 462–4. doi:10.1016/j.pedhc.2012.05.004. PMID 23099312.
 13. 13.0 13.1 13.2 "Melaleuca alternifolia (Tea Tree) Oil: A Review of Antimicrobial and Other Medicinal Properties". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 14. 14.0 14.1 Hammer, K; Carson, C; Riley, T; Nielsen, J (2006). "A review of the toxicity of Melaleuca alternifolia (tea tree) oil". Food and Chemical Toxicology. 44 (5): 616–25. doi:10.1016/j.fct.2005.09.001. PMID 16243420.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேயிலை_மர_எண்ணெய்&oldid=2817868" இலிருந்து மீள்விக்கப்பட்டது