தேமன் கால்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேமன் கால்கட்
Damon Galgut
2013 இல் கால்கட்
2013 இல் கால்கட்
பிறப்பு12 நவம்பர் 1963 (1963-11-12) (அகவை 59)
பிரிட்டோரியா, தென்னாப்பிரிக்கா
தொழில்
வகைநாடகம், புனைகதை, சிறுகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நல்ல மருத்துவர் (2003)
வாக்குறுதி (2021)
குறிப்பிடத்தக்க விருதுகள்புக்கர் பரிசு (2021)

தேமன் கால்கட் (Damon Galgut, பிறப்பு: 12 நவம்பர் 1963) தென்னாப்பிரிக்கப் புதின எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவரது "வாக்குறுதி" (The Promise) என்ற புதினத்திற்காக இவருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு கிடைத்தது. முன்னதாக 2003, 2010 ஆம் ஆண்டுகளில் இவரது நூல்கள் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியாவில் பிறந்தவர் கால்கட்.[1][2] இவரது தந்தை யூதக் குடும்பத்தில் பிறந்தவர்.[3][4] ஆறாவது அகவையில், இவருக்கு நிணநீர்க்குழியப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[5]

கால்கட் பிரிட்டோரியா ஆண்கள் உயர்தரப் பள்ளியில் கல்வி கற்று 1981 இல் வெளியேறினார்.[6] பின்னர் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நாடகக் கலையில் பட்டம் பெற்றார்.[2]

இலக்கியப் பணி[தொகு]

கால்கட் தனது 17-வது அகவையில் A Sinless Season (பாவமில்லாத பருவம், 1982) என்ற புதினத்தை எழுதினார்.[7] பின்னர் 1988-இல் சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். இத்தொகுதியில் ஒரு தாய் தன் மகனின் நோயுடன் போராடுவதை விவரிக்கும் ஒரு குறும் புதினம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.[8][9] இவரது குவாரி (1995) என்ற புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டு 1988 இலும், பின்னர் 2020 இலும் வெளிவந்தது.[10][11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கால்கட் ஓர் அகனன் ஆவார். இது அவரது எழுத்தில் ஆண் சார்ந்த உறவுகளில் அதிக கவனம் செலுத்த வழிவகுத்தது என்றும்,[12] ரூவால் டால் எழுதிய சிறுகதை "பன்றி" தனது எழுத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கால்கட் கூறுகிறார்.[13]

1990-களில் இருந்து கேப் டவுன் நகரில் வசித்து வருகிறார்.[14] இவர் தனது The Good Doctor (நல்ல மருத்துவர்) என்ற புதினத்தி கோவாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்து எழுதினார். இவர் யோகக் கலையில் மிகவும் ஈடுபாடுள்ளவர்.[15]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Damon Galgut" (ஆங்கிலம்). மான் புக்கர் பரிசு. 15 September 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 Cornwell, Gareth; Klopper, Dirk; Craig, MacKenzie (2010). The Columbia Guide to South African Literature in English Since 1945. Columbia University Press. பக். 95. doi:10.7312/corn13046. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-50381-5. http://archive.org/details/columbiaguidetos0000corn. 
 3. Kona, Bongani (3 August 2021). "Sharp Read | Breaking the word". New Frame. 4 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. Lenta, Margaret (14 September 2007). "Jewish writers and postcolonial choices in South Africa". in Stähler, Axel. Anglophone Jewish Literature. Routledge. பக். 171. doi:10.4324/9780203939222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-12142-7. 
 5. Babb, Andrew (January 2011). "Damon Galgut". World Literature Today 85: 5. https://www.proquest.com/docview/822629948. பார்த்த நாள்: 4 November 2021. 
 6. "Boys High Annual Events" (PDF). p. 28. 15 September 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 15 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. Alter, Alexandra (3 November 2021). "Damon Galgut Wins Booker Prize for 'The Promise'" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2021/11/03/books/booker-prize-winner-damon-galgut-the-promise.html. 
 8. "'Writing is what I am'". The Irish Times (ஆங்கிலம்). 4 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. Kostelac, Sofia (3 July 2015). "The Singularity of Damon Galgut's Small Circle of Beings" (in en). Journal of Literary Studies 31 (3): 73. doi:10.1080/02564718.2015.1083173. பன்னாட்டுத் தர தொடர் எண்:0256-4718. 
 10. Teems, Scott (17 April 2020), The Quarry (Crime, Mystery, Thriller), Prowess Pictures, Grindstone Entertainment Group, Metalwork Pictures, 13 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது, 4 November 2021 அன்று பார்க்கப்பட்டது
 11. Sobczynski, Peter (17 April 2020). "The Quarry movie review" (ஆங்கிலம்). 1 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 12. Allfree, Claire (18 June 2008). "Damon Galgut's end of the rainbow". Metro News. 14 May 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
 13. Galgut, Damon (6 August 2021). "Damon Galgut: 'After reading Roald Dahl, the world never looked the same'". the Guardian (ஆங்கிலம்). 13 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 15 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Damon Galgut: 'The Booker pulls a nasty little trick on you'". the Guardian. 4 September 2021. 5 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 15. Hashemzadeh, Kianoosh. "An Interview with Damon Galgut". Web Conjunctions. 21 May 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
 16. MacDonald, Gayle (3 March 2004). "Itani, Taylor regional winners" (in en-CA). The Globe and Mail. https://www.theglobeandmail.com/arts/itani-taylor-regional-winners/article994696/. 
 17. Reuters (16 September 2003). "Women Dominate Britain's Booker Prize Shortlist". த நியூயார்க் டைம்ஸ். ராய்ட்டர்ஸ். https://www.nytimes.com/2003/09/16/books/women-dominate-britains-booker-prize-shortlist.html. 
 18. Pauli, Michelle (9 March 2005). "Final ten braced for Impac". தி கார்டியன். https://www.theguardian.com/books/2005/mar/09/impacprize. 
 19. "SA Lit Rules the 2009 Commonwealth Writers' Prize Shortlists". Sunday Times Books LIVE. 18 February 2009. http://bookslive.co.za/blog/2009/02/18/sa-lit-rules-the-2009-commonwealth-writers-prize-shortlists/. 
 20. "At a glance: Man Booker shortlist 2010" (in en-GB). BBC News. 12 October 2010. https://www.bbc.com/news/entertainment-arts-11213404. 
 21. "Damon Galgut wins Booker Prize with 'tour de force' novel The Promise". BBC News. 3 November 2021. https://www.bbc.com/news/entertainment-arts-59149960. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேமன்_கால்கட்&oldid=3455986" இருந்து மீள்விக்கப்பட்டது