தேப்ரா ஆன் பிசுசெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேப்ரா ஆன் பிசுசெர்
Debra Ann Fischer
தேப்ரா பிசுசெர்
கெப்ளரிய உடையில் தேப்ரா அப்சிலான் ஆந்திரமேடாக்கள்
துறைவானியல்
பணியிடங்கள்யே பல்கலைக்கழக, சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்
கல்வி கற்ற இடங்கள்ஐயோவா பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவானியல்

டேப்ரா ஆன் பிசுசெர் (Debra Ann Fischer) யேல் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் புறக்கோள் ஆய்வாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் முதல் பல கோல் அமைப்பைக் கண்டறிந்த குழுவில் ஒருவர்.[1][2]

ஆய்வும் பணியும்[தொகு]

இவர் குறு விண்மீன்களைப் பற்றியும் அருகாமைப் பால்வெளியில் உள்ள புறக்கோள்கள் உட்பட்ட குறைபொருண்மை உடுக்கணப் பொருள்களைப் பற்றியும் பலரோடு இணைந்து 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ந்ழுதியுள்ளார். இவர் N2K கூட்டு நிறுவனப் புறக்கோள்களுக்கான முதன்மை ஆய்வாலர் ஆவார். கோஎஃப்ரி மார்சியின் தலைமையில் அமைந்த புறவெளிக் கோள்தேட்டக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆவார்.[2][3] She was the primary investigator for Chiron, the CTIO High Resolution Spectrometer.[4] இவர் புறவெளிக் கோள்களைத் தேட உதவும் அடுத்த தலைமுரைகண்ணாடியிழை டாப்ளர் தேட்டக் கருவியைப் புறவெளிக் கோள்தேட்டக் கழகத்துக்காக வடிவமைத்தார்.

கல்வி[தொகு]

இவர் அயோவா பல்கலைக்கழகத்தில் 1975 இல் பட்டம் பெற்றார், மேலும் மூதறிவியல் பட்டத்தை சான் ஃபிரான்சிசுகோ பல்கலைக்கழகத்தில் 1992 இல் பெற்றுள்ளார். இவர் 1998 இல் தன் முனைவர் பட்டத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1998 இல் பெற்றுள்ளார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Butler, Paul; Marcy, Geoffrey W.; Fischer, Debra A.; Brown, Timothy M.; Contos, Adam R.; Korzennik, Sylvain G.; Nisenson, Peter; Noyes, Robert W. (December 1999). "Evidence for Multiple Companions to υ Andromedae". The Astrophysical Journal 526 (2): 916&ndash927. doi:10.1086/308035. Bibcode: 1999ApJ...526..916B. 
  2. 2.0 2.1 Dennis Overbye (12 May 2013). "Finder of New Worlds". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/05/13/science/finder-of-new-worlds.html. பார்த்த நாள்: 13 May 2014. 
  3. "N2K Consortium". Yale astronomy. பார்த்த நாள் 27 February 2014.
  4. "MRI: Development of Chiron: CTIO High Resolution Spectrometer". Research Commercialization and SBIR Center. San Francisco State University. பார்த்த நாள் 27 February 2014.
  5. "Radcliffe Institute Guest Lecturer Bio". மூல முகவரியிலிருந்து 12 March 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 February 2008.
  6. "Interview with D. Fisher, Planet-Hunter". theWoman Astronomer (1 January 2008). பார்த்த நாள் 4 February 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேப்ரா_ஆன்_பிசுசெர்&oldid=2691829" இருந்து மீள்விக்கப்பட்டது