தேன் உருவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனீப்பூச்சி[தொகு]

தேனீப்பூச்சி

தேனீக்கள் ஆறு கால்களைக் கொண்ட சிறிய பூச்சி இனத்தைச் சார்ந்தது.இவை ஈ பேரினத்தில் ஒரு வகை.இவை தனது உடலில் இருந்து வெளியேறும் மெழுகால் அறுகோண அறைகள் கொண்ட கூடுகளை அமைத்து தேனை சேகரிக்கின்றன.இதற்கு தேனடை என்று பெயர்.[1]

தேன் சேகரிப்பு[தொகு]

தேன்க்கூட்டில் தேன் சேகரித்தல்

தேனீக்கள் மணிக்கு 40கி.மீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டது.ஒரு வருடத்தில் கூட்டிற்கு 450கிலோ எடையுடைய குளுகோஸ் மலரிலிருந்தும்,புரொபோலிஸ் எனும் பிசின் மரங்களிலிருந்தும்,அதனோடு நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்பட்டு தேன் சேகரக்கப்படுகிறது. [2]

மூன்று வித தேனீக்கள்[தொகு]

1.இராணித் தேனி(Queen Bee)

இராணி தேனி

அளவில் பெரிய ,உணரகொம்புகடைய,கொடுக்குகளைக் கொண்டது.ஒரு கூட்டிற்கு ஒன்று மட்டுமே இருக்கும்.65_100அடி உயரத்தில் பறந்து கொண்டே ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கிறது.வருடத்திற்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் முட்டை இடுகிறது.

2.ஆண் தேனீ(Drone Bee)

ஆண் தேனி

கொடுக்கள் அற்ற,நுற்றுக்கணக்கில் அமைந்த,பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ள இவை உணவிற்காக வேலைக்கார தேனீக்களை சார்ந்துள்ளன.

3.வேலைக்காரத் தேனீ(Workers Bee)

வேலைக்காரத்தேனீக்கள்

முட்டை இட்டு சந்ததி பெருக்கம் செய்ய இயலாத இவை மெழுகைச் சுரக்கக் கூடிய தேன் பைகள் கொண்ட து.இவை இராணி மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவளிக்கின்றன. [3]

தேனீக்களின் உணவு[தொகு]

பாரபட்சத்துடன் உணவு பரிமாறுதலில் தேனிக்கள் குறிப்பிடத்தக்கவை.இராணி ஈக்களுக்கு அவை "இராயல் ஜெல்லி" என அழைக்கபடும் விசேச உணவு அளிக்கபடுகிறது.ஆனால் வேலைக்கார தேனிக்களுக்குக் கிடைப்பதோ சாதாரணமானஉணவுதான்.அதுவும் ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்குதான் கிடைக்கும்.பிறகு மூன்றாம் நாளிலிருந்து பயன்படுத்த படாத உணவு தரப்படுகிறது.இதனால்தான் அவை வளமான பெண் ஈக்களாக மாறாமாலும்,ஒரு சில வாரங்கள் வாழ்வனவாகவும் இருக்கின்றன.[4]

தேன் தயாரித்தல்[தொகு]

தேனீக்கள் இளவேனில் (spring) பருவத்தில் தேன் சேகரிக்கத் தொடங்குகின்றன.மலர்களிலுருந்து சேகரிக்கப்படும் "மது"(nector) வில் 60% நீர்தான் உள்ளது.இந்த நீரை 20% குறைத்தால் தான் தேனீக்களால் தேன் தயாரிக்க இயலும்.சராசரியாக, நல்ல தேனீ குடும்ப்பதிலுள்ள அத்தனை தேனீக்களும் சுமார் 150-250 கிலோ தேனை ஒரு பருவத்தில் சேகரிக்க இயலும். இதன் படி கணக்கிட்டு பார்த்தால் அவை சுமார்180-350 லிட்டர் நீரை ஆவியாக்கியிருந்தால்தான் தேனை உண்டாக்கியிருக்கமுடியும்.

வெய்யில் கடுமையாக இருந்தால்தான் ஆவியாதல் நடைபெற முடியும்.வெய்யில் சற்று குறைவாக இருந்தால், தேனீக்கள் வேறு செயற்கை வழியினைக் கையாளுக்கின்றன.அவை அனைத்தும் ஒருங்கு கூடி நெருங்கிக் கொண்டு இருந்து, தேவையான வெப்பத்தை உண்டாக்கிக் கொள்கின்றன.தேன் தயாரிக்கப்பட்டதும் அதற்கென உரிய தனியான தேன் கூண்டில் அது வைக்கப்பட்டு, மெலுகினால் மூடப்பட்டு விடுகிறது.

தேனில் இருப்பது பெரும்பாலும் 'ப்ரக்டோஸ்' எனப்படும் பழச்சர்க்கரையும்,திராட்சை சர்க்கரையும்,குளுகோஸூம் தான்.தேனீக்கள் சேகரிக்கும் மதுவில் இருப்பது கரும்புச் சர்க்கரை (சுக்ரோஸ்) மட்டுமே.இந்த மதுவைத் தங்களது இரைமப்பைகளில் பயன்படுத்தி,கரும்புச் சர்க்கரையை ப்ரக்டோஸாகவும் குளுக்கோஸாகவும் மாற்றிக் கழிப்பதுதான் தேன்.

தூய தேன்

தேன் கெடாமல் இருப்பதற்கு காரணம் அதில் நுண்ணுயிரிகளை அழித்துவிடக் கூடிய இரசாயனப் பொருள்கள் இருப்பதே காரணம்.

தேனின் மருத்துவகுணங்கள்[தொகு]

1.இயற்கையான சத்து நிறைந்த, உணவை எளிதில் செரிக்கக்கூடியது.ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் இணையானது.

2.பித்த நீரை சுரந்து தொண்டை,இருதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்க உதவுகிறது.

3.மேலும் சுவாசக் கோளாறு.வயிரற்றுக் கடுப்பு,கிருமி நோய்,தாகம்,வாந்தி,பேதி,தீப்புண்,தாகம்,மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.

4.பசியைத் தூண்டி செரிமானத்திற்கு உதவுகிறது.[5]

  1. ta.wikipedia.org/wiki/தேனீ
  2. ta.wikipedia.org/wiki/தேனீ
  3. ta.wikipedia.org/wiki/தேனீ
  4. உயிரியலில் சில உண்மைகள்;இராம.இலக்குமிநாராயணன்,சேகர் பதிப்பகம்
  5. www . valaitamil. com
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_உருவாக்கம்&oldid=2356531" இருந்து மீள்விக்கப்பட்டது