தேன்கூடு வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனீ வேலி அல்லது தேன்கூடு வேலி (beehive fence) என்பது யானைகளுக்கு இயற்கையாக தேனீக்களிடம் இருக்கும் அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட வேலி ஆகும்.[1]

இந்த வேலிகள் விளை நிலங்கள ஒட்டிய இடங்களிலே தரையில் இருந்து மார்பு வரையிலான உயரம்வரை தொட்டால் அசையும்படியான பெட்டியில் தேனீக்கள் வளர்கப்படுகின்றன இவ்வாறு ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியில் தேன் கூடுகள் நிறுவப்படுகின்றன. அந்தப் பெட்டிமீது கட்டப்பட்ட கயிற்றைக் கொண்டு வேலிபோல அமைக்கப்படுகிறது வேலியைத் தகர்க்க யானைகள் முயன்றால் தேனீக்கள் கிளர்ந்தெழுந்து யானைகளை அச்சுறுத்துகின்றள இதனால் விளைநிலங்களுக்குள் நுழைய எத்தனிக்கும் யானைகள் இந்தத் தேனீக்களைக் கண்டு விலகி ஓடி அப்பகுதியைத் தவிர்க்கிறன.[2]

இந்த அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது, இதனால் மனிதர் யானை இடையிலான மோதல் 85% குறைந்துள்ளது.

கென்யாவில் இயங்கும் ‘சேவ் தி எலிஃபன்ட்ஸ்’ என்ற இங்கிலாந்துத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் லூசி இ. கிங் ‘தேனீ வேலி’ என்ற இந்த புதிய வழிமுறையைக் கண்டுபிடித்தார். யானைகள் ஒருவகையான மரத்தை மட்டும் புறக்கணிப்பதை கிங் கவனித்து. அந்த மரத்தைப் பார்த்த போது, அம்மரங்களில் தேனீக்கள் கூடுகட்டியிருந்தது கவனித்து இதைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2013 ஆண்டுக்கான செயின்ட் ஆண்ட்ரூஸ் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது.

தான்சானியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பின்னர் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவில் கர்நாடகத்தின் கனரா மாவட்டத்திலும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்திலும் தேனீ வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த முறையை அடிப்படையாக வைத்துச் சில நாடுகளில் தேனீக்களின் ஒலியைப் பதிவுசெய்து அதை ஒலிப்பரப்புவதன் மூலம் யானைகள் விளைநிலங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்வண்டி விபத்துகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, தேனீ ஒலியை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை இந்தியாவில் முதல் முறையாக குவாஹட்டிக்கு அருகில் கமகியா, ஆஸாரா ஆகிய தொடர்வண்டி நிலையங்களில் நிறுவியுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://animals.oreilly.com/elephants-and-bees/
  2. http://elephantsandbees.com/wp-content/uploads/2013/08/Beehive-Fence-Construction-Manual-2012.pdf
  3. ஆர். ஜெய்குமார் (2018 பெப்ரவரி 24). "யானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி". கட்டுரை. தி இந்து தமிழ். 24 பெப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்கூடு_வேலி&oldid=2496020" இருந்து மீள்விக்கப்பட்டது