தேனீ ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனீ ஓசனிச்சிட்டு
adult male non-breeding
female in flight
Both at Palpite, கியூபா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. helenae
இருசொற் பெயரீடு
Mellisuga helenae
(Lembeye, 1850)

தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird, mellisuga helenae) என்ற பறவை இனம் ஓசனிச்சிட்டு என்ற வகையைச் சார்ந்ததாகும். இப்பறவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள் வாழும் உயிரினம் ஆகும். இப்பறவை கியூபா நாட்டின் இரண்டாவது பெரிய தீவான ஐலா டீ லா ஜுவெண்டடு (Isla de la Juventud) பகுதியில் அடர்ந்த காடுகள் நிறைந்த முக்கிய தீவின் முகத்துவாரங்களில் அதிகமாக காணப்படும் ஒரு சிறிய பறவை இனம் ஆகும்.[2][3]

தன்மை[தொகு]

இப்பறவையின் எடை 2 கிராம் வரை இருக்கும். இதன் நீளம் பெண் 2 அங்குலம், ஆண் 1.75 அங்குலம் அளவுதான் இருக்கும். இப்பறவை நொடிக்கு 80 தடவைகள் இறக்கையை விரிக்கின்றன. இவை அதன் கூடுகளை சிலந்தியின் வலையைக்கொண்டு கட்டிக்கொள்கின்றன.இப்பறவைகளில் பெண்பறவை சிலந்திகளின் நூலாம்படையைக் கொண்டு அதோடு மரப்பட்டை, பச்சை பூஞ்சைகள் சேர்த்து 2.5 செ.மீ(1 அங்குலம்) கூடு கட்டும். இக்கூடு மென்மையான தாவர இலைகளில் கூடுகளைக்கட்டுகிறது. இதன் முட்டை பட்டாணி விதையை விட பெரியதாக இருக்கும். இதில் பெண் பறவை தனியாக அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

உணவு[தொகு]

அகோர பசி கொண்ட இப்பறவைகள் சிலந்திகளையும், ஈக்களையும், தேனையும், மற்றும் மகரந்த துகள்களையும் உணவாக உண்டு வாழ்கின்றன.

தோற்றம்[தொகு]

இதன் உடல் பகுதி கணக்கிடமுடியாத வண்ணத்திலுள்ள நிறமாக இருக்கும். இதன் அலகு சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Mellisuga helenae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Del Hoyo, J. Elliott, A. and Sargatal, J.(1999) உலகப் பறவைகளின் உசாநூல் Volume 5: Barn-owls to Hummingbirds Lynx Edicions, பார்செலோனா
  3. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), ISBN 978-0-8493-4258-5.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mellisuga helenae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_ஓசனிச்சிட்டு&oldid=3477137" இலிருந்து மீள்விக்கப்பட்டது