தேனீக்களின் எதிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனீக்களின் எதிரிகள் என்பவை நன்மை செய்யும் தேனீக்களை அழிக்கும் உயிரினங்கள் ஆகும்.அவற்றில் சில,தேனீ மெழுகு அந்துப்பூச்சி,எறும்புகள்,குளவிகள்,பறவைகள்,வேறு எதிரிகள் ஆகும்.

தேனீ மெழுகு அந்துப்பூச்சி[தொகு]

தேனீ மெழுகு அந்துப்பூச்சியானது தேனீக்களின் முக்கிய எதிரியாகும். தென்னிந்தியாவில் சமவெளிப்பிரதேசங்களிலும்,மலையடிவாரப்பகுதிகளிலும் வருடமுழுவதும் காணப்பட்டு அதிக சேதம் விளைவிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த,கூடுகளை அடிக்கடி கண்காணித்து,கூடுகளில் காணப்படும் அந்துப்பூச்சிகள்,மற்றும் புழுக்களின் கூடுகளை அழித்து,தேன்கூட்டை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

எறும்புகள்[தொகு]

எறும்புகளில் கருப்பு எறும்பு,சிறிய சிவப்பு எறும்பு ஆகியவை தேனீக்களின் எதிரிகளாகும்.இவை தேன் கூட்டினுள் சென்று தேன்[1],தேனீயின் முட்டைகள் போன்றவற்றை உண்டுவிடும். இதை தடுக்க தேன் கூடுகள் பொருத்தியிருக்கும் தாங்கிகளைச் சுற்றி தண்ணீர் தொட்டி அமைத்தல் வேண்டும்.

குளவிகள்[தொகு]

குளவிகளில் மஞ்சள் பட்டை குளவி[2],வேட்டையாடும் குளவி ஆகியவை முக்கிய எதிரிகளாகும். மஞ்சள் பட்டை குளவிகள் கூட்டமாக வாழும்.இவை காகிதத்தைப் போன்ற பொருளினால் கூடு கட்டி வாழ்பவை.இவை தேனீக்களைப் பிடித்து, அரைத்து, சாற்றை புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கும். குளவிக்கூடுகளைக் கண்டுபிடித்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். வேட்டையாடும் குளவிகள் தேனீக்கள் பறக்கும்போதே விரட்டி பிடிக்கக்கூடியது. இவற்றைக் கட்டுப்படுத்த அதன் கூடுகளைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும்.

பறவைகள்[தொகு]

பறவைகளில் கருங்குருவி[3] மற்றும் சில பறவைகளும் தேனீக்களைப் பிடித்து உண்ணக்கூடியவை.

வேறு எதிரிகள்[தொகு]

தட்டான் பூச்சிகள், இடையன் பூச்சிகள் போன்ற பூச்சிகளும் பல்லிகள்,தவளைகள் போன்றவைகளும் தேனீக்களைப் பிடித்து உண்ணக்கூடியவை.

[4]

  1. https://ta.wikipedia.org/s/1r8
  2. https://en.wikipedia.org/wiki/Syntomeida_ipomoeae
  3. https://en.wikipedia.org/wiki/Black_Sparrow_Books
  4. http://agriinfo.in/default.aspx?page=topic&superid=6&topicid=1523