உள்ளடக்கத்துக்குச் செல்

தேனி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனி
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தேனி
மக்களவைத் தொகுதிபெரியகுளம்
நிறுவப்பட்டது1957
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுபொது

தேனி சட்டமன்றத் தொகுதியில் தேனி-அல்லிநகரம், சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளும், தேனி, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்பு தேனி சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. இதன்படி தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்த தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியும் , ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்றப் பகுதியும் பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) (தனி) சட்டமன்றத் தொகுதியுடனும், மற்ற பகுதிகள் போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி), கம்பம் (சட்டமன்றத் தொகுதி) போன்றவைகளுடன் சேர்க்கப்பட்டு விட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 ஆர். டி. கணேசன் அதிமுக 45.50
2001 ஆர். டி. கணேசன் அதிமுக 48.88
1996 என். ஆர். அழகராஜா த.மா.கா 62.76
1991 இரா. நெடுஞ்செழியன் அதிமுக 61.51
1989 ஞா. பொன்னு பிள்ளை திமுக 32.87
1984 வே. இரா. ஜெயராமன் அதிமுக 57.36
1980 வே. இரா. ஜெயராமன் அதிமுக 55.44
1977 வே. இரா. ஜெயராமன் அதிமுக 45.71
1971 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக
1967 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக
1962 எஸ். எஸ். ராஜேந்திரன் திமுக
1957 என். எம். வேலப்பன்,
என். ஆர். தியாகராசன் (இருவர்)
காங்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: தேனி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். ஆர். தியாகராசன் 38,185 26.62%
சுயேச்சை எஸ். எஸ். ராஜேந்திரன் 31,404 21.90%
காங்கிரசு என். எம். வேலப்பன் 26,673 18.60%
சுயேச்சை எசு. அருணாச்சலம் 15,308 10.67%
சுயேச்சை ஏ. அய்யனார் 13,163 9.18%
பி.சோ.க. ஆர். சுருளியம்மாள் 10,731 7.48%
சுயேச்சை பி. செல்வராஜ் 7,960 5.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,781 4.73%
பதிவான வாக்குகள் 1,43,424 90.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,58,034
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை
  2. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4346422" இலிருந்து மீள்விக்கப்பட்டது