தேனி. பொன். கணேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேனி. பொன். கணேஷ்
Ponganesh.JPG
பிறப்புபொன். கணேஷ்
சூலை 11, 1964
இராமநாதபுரம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்தேனி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தேனி. பொன். கணேஷ்,
சீனு,
சமுதாயப் பித்தன்
கல்விபத்தாம் வகுப்பு
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்பொன்னுச்சாமி சேர்வை (தந்தை),
சேதுஅம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
வளர்மதி
பிள்ளைகள்கோபிநாத் (மகன்),
ரம்யா (மகள்)
உறவினர்கள்சகோதரர்கள் - 4,
சகோதரிகள் - 2

தேனி. பொன். கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். தேனியில் உணவகம் ஒன்றைச் சொந்தமாக நடத்தி வரும் இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்), கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  1. சின்னச் சின்ன ஆன்மிகக் கதைகள் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் வெளியீடு - 2006)
  2. ஆச்சர்யம்!ஆனால் உண்மை (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் வெளியீடு - 2006)
  3. மேதைகள் சொன்ன போதனை கதைகள் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் வெளியீடு - 2008)
  4. அனுமன் (தென்றல் நிலையம், சென்னை வெளியீடு - 2010)
  5. பொது அறிவுத் துளிகள் (கௌதம் பதிப்பகம், சென்னை வெளியீடு - 2012)

மொழி மாற்றம்[தொகு]

இவரது சின்னச் சின்ன ஆன்மிகக் கதைகள் எனும் நூல் கேரளாவின் மாத்ருபூமி நிறுவனத்தால் மலையாள மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

தேனி பொன் கணேஷ் நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி._பொன்._கணேஷ்&oldid=2738486" இருந்து மீள்விக்கப்பட்டது