தேனியல் மனந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனியல் மனந்தா
பிறப்பு14 ஆகத்து 1981 (1981-08-14) (அகவை 42)
ஜகார்த்தா, இந்தோனேசியா
மற்ற பெயர்கள்வி.ஜே தேனியல்
பணிநடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஊடக ஆளுமை, ராப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2003- தற்போது வரை
பெற்றோர்தோனி மனந்தா மற்றும் அனாவதி அங்கசா
வலைத்தளம்
Daniel Mananta Homepage

தேனியல் மனந்தா(ஆங்கிலம் :Daniel Mananta) 1981 ஆகஸ்ட் 14 அன்று பிறந்த இவர் ஒரு இந்தோனேசிய தொலைக்காட்சி தொகுப்பாளரும், ஊடக ஆளுமையும் மற்றும் நடிகருமாவார். சில நேரங்களில் வி.ஜே. தேனியல் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தோனேசிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான, 2003 எம்டிவி இந்தோனேசியா தொலைக்காட்சி தொகுப்பாளர் தேடுதல் வேட்டைப் போட்டியில் வென்ற பிறகு இவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. தோனி மனந்தா மற்றும் அனாவதி அங்காசா என்ற இவரது இரண்டு குழந்தைகளில் ஒருவர் இப்போது ஒரு பொழுதுபோக்கு மற்றும் ஒரு இளம் தொழில் முனைவோராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அவர் 2010 இல் இந்தோனேசிய அதிரடித் திரைப்படமான " உரூமா தாரா " என்பதில் முக்கிய பங்கு வகித்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இந்தோனேசியாவின் சகார்த்தாவில் தேனியல் தனது குழந்தை பருவத்தை நண்பர்களுடன் இனிமையான முறையில் கழித்தார். மழலையர் பள்ளி முதல் இளையோர் உயர்நிலைப்பள்ளி இறுதி வரை வடக்கு சகார்த்தாவின் புளூட்டில் உள்ள தாரகனிதாவில் தரம் நான்கை முடித்தார் உயர்நிலைக் கல்வியை முடிக்க தேனியல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலுள்ள அக்வினாசு என்ற கல்லூரிக்குச் சென்றார். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தான் சமூக ரீதியாக மோசமாக இருப்பதாக அவர் உணர்ந்ததால், அவரது குழந்தைப்பருவம் விவாதப் பொருளாக உள்ளது. தேனியலுக்கு வில்லியம் மனந்தா என்ற ஒரு சகோதரர் இருக்கிறார்.[2]

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் வாழ்க்கை[தொகு]

பெர்த்தில் தனது பள்ளிப் பருவத்தில், தேனியல் நன்தோசு என்ற ஒரு உணவகத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பெற்றார். முதலில் ஒரு பணியாளராகவும், இறுதியில் உதவி மேலாளருக்கு சமமான உயர் பதவியையும் அடைந்தார். இருப்பினும், உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுகள் நெருங்கியவுடன், அவர் தனது கல்வியில் கவனம் செலுத்துவதற்காக பகுதிநேர வேலையை விட்டுவிட்டார்.

அக்வினாசு கல்லூரியில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, தேனியல் நிதி நிர்வாகத்தில் இளங்கலை வணிக நிர்வாகம், மற்றும் எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் ஆகிய இரட்டை பட்டம் பெற்றார் . 2002 இல் அவர் தனது 20 வயதில் இந்தப் பட்டங்களைப் பெற்றார்.

6 மாதங்களுக்கு பட்டதாரியாக பெர்த்தில் ஒரு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஆம்வே தயாரிப்புகளை விற்கும் பல நிலை சந்தைப்படுத்தல் அமைப்பான நெட்வொர்க் 21 என்ற விற்பனையில் டேனியல் ஈடுபட்டார். அவ்வாறு விற்பனை செய்து கொண்டிருந்தபோது, தேனியல் பொதுமக்களின் பேச்சை கவனிகத் தொடங்கினார். பின்னர்,அவர் சிட்டி வங்கி ஆஸ்திரேலியா என்ற வங்கியில் 3 வாரங்கள் பயிற்சி பெற்றார்.

தொழில்[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தனது தாயகம் திரும்பும் உணர்வோடு இருந்த டேனியல் 2002 இன் இறுதியில் ஜகார்த்தாவுக்கு திரும்பினார். ஜகார்த்தாவின் மங்கா துவாவில் தனது தந்தையின் கடையில் பணிபுரிந்தார். மங்கா துவா தலைநகரில் ஒரு அழகான விற்பனை மையமாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த வேலை தெனியல் எதிர்பார்த்த ஒன்றல்ல, இதனால் அவர் 2003 இன் ஆரம்பத்தில் வெளியேறினார்.

அதே நேரத்தில், எம்டிவி இந்தோனேசியா எம்டிவி தொலைக்காட்சி தொகுப்பாளர் தேடுதல் வேட்டைப் போட்டி 2003 என்ற நிகழ்வை அறிமுகப்படுத்தியது. தேனியல் தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்துப்பார்க்க இப்போட்டியில் நுழைந்தார், 6000 போட்டியாளர்களிடமிருந்து இறுதிப் போட்டியாளராகத் திகழ்ந்தார், இறுதியில் போட்டியின் வெற்றியாளராக உருவெடுத்தார்.

விரைவில், தேனியல் அனைவருக்கும் அறிமுகமான ஒரு முகமாக மாறினார். 2004 ஆம் ஆண்டில், அவர் ரெட் கார்பெட் எம்டிவி ஆசியா விருதுகளை பெற்றார். எம்டிவி தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த காலத்தில், சர்வதேச இசையில் - கோர்ன், இலிங்கின் பார்க், அவ்ரில் இலெவினின், தி பிளாக் ஐட் பீஸ், கரேத் கேட்ஸ், மைக்கேல் கிளை மற்றும் நிக்கோல் ஷெர்ஸிங்கர், உள்ளிட்ட மிகப் பெரிய இசையினை வெளியிட்டதற்காக ஒரு பெரிய பெயரைப் பெற்றார். சோனி எரிக்சன் மற்றும் அடிடாஸ் இந்தோனேசியா உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கான தேனியல் தூதராகவும் ஆனார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

காதல்[தொகு]

தேனியலின் கூற்றுப்படி, அவர் பெரும்பாலானவர்களை விட தாமதமாக டேட்டிங் செய்யத் தொடங்கினார் - அவருக்கு 17 வயதாக இருந்தபோது முதல் உறவு ஏற்பட்டது. அவர் 2008 இல் மரிசா நாசுசனுடன் ஒரு சுருக்கமான உறவில் இருந்தார்; அதே ஆண்டில் அந்த உறவு முடிவடைந்தது. பாடகர்களான ஆக்னஸ் மோனிகா மற்றும் சாண்ட்ரா தெவி ஆகியோருடன் தேனியலின் உறவு வதந்திகளாக பரப்பப்பட்டன, ஆனால் இவை உறுதிப்படுத்தப்படவில்லை.

பொழுதுபோக்குகள்[தொகு]

பட்க்கதைகள் படித்தல் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பது தேனியலுக்கு பிடித்த இரண்டு பொழுது போக்குகள். அவரது கால அட்டவணை காரணமாக, தேனியல் வீட்டிலோ அல்லது பயணத்தில் இருக்கும்போது டிவிடிகளில் பார்த்து தனது திரைப்பட ஆசையை பெறுகிறார். அவரது பாடிக்-ப்ரின்ட் டொயோட்டா ஆல்பார்ட் என்ற வாகனம் ஒரு நகரும் திரையரங்காகவும் செயல்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "My Jakarta: TV Personality Daniel Mananta". The Jakarta Globe. 25 October 2009. http://www.thejakartaglobe.com/columns/my-jakarta-tv-personality-daniel-mananta/337538. 
  2. "Daniel Mananta Official Website". www.danielmananta.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனியல்_மனந்தா&oldid=3857054" இலிருந்து மீள்விக்கப்பட்டது