தேடல் நடுநிலைத்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேடல் நடுநிலைத்தன்மை என்பது தேடல் பொறிகள் தேடல் முடிவுகளை வழங்க வகுக்கும் திருத்தக் கொள்கைகளில், முடிவுகளின் விரிவு, நடுநிலை, பொருத்தம் போன்றவைத் தவிர்த்த வேறு காரணங்களைக் கருதக் கூடாது எனும் கொள்கையாகும்[1]. அதாவது ஒரு பயனர் தேடுபொறியிடம் ஏதேனும் வினவினால், அதன் வரம்பில் உள்ள மிகப் பொருத்தமான முடிவுகளை எவ்வித வளைவு நெளிவுக்கும் உட்படுத்தாமல், தொடர்பான முடிவுகளை ஒதுக்காமலும், தொடர்பற்ற முடிவுகளைத் திணிக்காமலும் வழங்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Search, but You May Not Find". The New York Times. 2009. http://www.nytimes.com/2009/12/28/opinion/28raff.html. பார்த்த நாள்: March 3, 2011.