தேஜிந்தர் பால்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேஜிந்தர் பால்சிங் ஒரு இந்திய குண்டு எறிதல் வீரர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்ற 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.[1]

பிறப்பும், இளமையும்[தொகு]

இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் மோகா மாவட்டத்தில் கோசா பாண்டோ என்ற கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தந்தையின் வலியுறுத்தலின் பேரில் துடுப்பாட்டத்திலிருந்து குண்டு எறிதலுக்கு மாறினார்.

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

2017 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பாட்டியாவில் நடந்த பெடரேசன் கோப்பை தேசிய மூத்தோர் பிரிவு 20.40மீ சாதனையைச் செய்தார். இந்த உலக சாம்பியன்சிப் தகுதிக்கான அளவான 20.50மீட்டருக்குச் சற்றுக் குறைவாக செய்திருந்தார்.[2] அதைத் தொடர்ந்த மாதத்தில் 2017 ஆம் ஆண்டு புவனேசுவரில் நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில் 19.77 மீட்டர் தூரம் எறிந்து 0.03 மீட்டர் தொலைவு வேறுபாட்டில் தங்கப்பதக்கத்தை தவற விட்டார். இந்தப் போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.[3]

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 19.42 மீட்டர் தொலைவு எறிந்து எட்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது[4]

2018 ஆம் ஆண்டு ஆகத்து 25 ஆம் நாள், 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20.75 மீட்டர் அளவு தொலைவு எறிந்து தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சாதனையையும், இந்திய அளவிலான தேசிய சாதனையையும் முறியடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asian Athletics Championship 2019: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழச்சி!". Tamil Indian Express. 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Fed Cup: Neeraj wins gold with meet record". The Tribune. 3 June 2017. https://www.tribuneindia.com/news/sport/fed-cup-neeraj-wins-gold-with-meet-record/416899.html. பார்த்த நாள்: 23 August 2018. 
  3. Selvaraj, Jonathan (8 July 2017). "Asian Athletics Championships: Anas wins gold, Dutee bags bronze on day 2". ESPN.in. http://www.espn.in/athletics/story/_/id/19909250/asian-athletics-championships-mohammed-anas-wins-gold-dutee-chand-bags-bronze-day-2. பார்த்த நாள்: 23 August 2018. 
  4. "CWG 2018: Muhammed Anas puts himself in Milkha Singh’s shoes in Gold Coast". The Indian Express. 10 April 2018. https://indianexpress.com/article/sports/commonwealth-games/cwg-2018-muhammed-anas-gold-coast-400m-final-5130847/. பார்த்த நாள்: 23 August 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜிந்தர்_பால்சிங்&oldid=2703362" இலிருந்து மீள்விக்கப்பட்டது