தேஜஸ் எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Tejas Express) இந்திய இரயில்வே முதலில் அறிமுகம் செய்த, முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக தொடருந்து ஆகும். இருக்கை வசதிகள் மட்டும் கொண்ட, நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் விரைவு வண்டியின் கதவுகள் தானியங்கும் வசதி கொண்டது.[1]இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கிமீ ஆகும்.

வரலாறு[தொகு]

முதல் தேஜஸ் விரைவு வண்டி, 24 மே 2017 அன்று முதல் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து, 551.7 கிமீ தொலைவில் உள்ள கோவாவின், கர்மலி தொடருந்து நிலையம் [2] வரை இயக்கப்படுகிறது. இதற்கான இப்பயண நேரம் 8.30 மணிநேரம் ஆகும். [3][4]

தேஜஸ் விரைவு வண்டியில் வசதிகள்[தொகு]

தேஜஸ் விரைவு வண்டிகளில் பயோ கழிப்பறை, தொலைக்காட்சி பெட்டிகள், இலவச இணைய வசதிகள் கொண்டது. [5] சதாப்தி விரைவு வண்டிகளின் கட்டணத்தை விட, தேஜஸ் வண்டியின் கட்டணம் 20% முதல் 30% கூடுதலாக இருக்கும்.[6]

இவ்வண்டியில் பொதுவான இருக்கை வசதி 3 + 2 எனும் முறையில் இருக்கைகள் உள்ளது. சொகுசு இருக்கைகள் 2 + 2 என்ற வரிசையில் உள்ளது. பெட்டியின் அனைத்து கதவுகளும் தானியங்கியாக செயல்படுகிறது.[7]

சேவைகள்[தொகு]

தற்போது கீழ்கண்ட வழித்தடங்களில் தேஜஸ் விரைவு வண்டிகள் இயங்குகிறது.

வண்டி எண் பெயர் வாராந்திர சேவை நாட்கள்
22119/22120 மும்பை - கோவா தேஜஸ் விரைவு வண்டி[8] [9] 5 (திங்கள் & வியாழன் தவிர)
22425/22426 புதுதில்லி - சண்டிகர் தேஜஸ் விரைவு வண்டி [10] 6 (புதன் தவிர)
12585/12586 லக்னோ - புது தில்லி தேஜஸ் விரைவு வண்டி[11] [12] 5 (ஞாயிறு & வியாழன் தவிர)
22671/22672 எழும்பூர் - மதுரை தேஜஸ் விரைவு வண்டி[13][14] 6 (வியாழன் தவிர)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜஸ்_எக்ஸ்பிரஸ்&oldid=2667267" இருந்து மீள்விக்கப்பட்டது