தேசிய விலங்கு நல நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய விலங்கு நல நிறுவனம் (National Institute of Animal Welfare) என்பது இந்திய அரசின் ​​சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் துணை நிறுவனமாகும். 1999 ஜனவரி 16 ஆம் தேதி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற நிதி நிலைக் குழுவின் முடிவின்படி பல்லப்கரில் (அரியானா) தேசிய விலங்கு நல நிறுவனம் நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் இந்நிறுவனம் அரியானாவின் பல்லப்கார்ப் நகரில் அமைந்துள்ளது.[1][2] இந்நிறுவனத்திற்காகக் கிராம பஞ்சாயத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அரியானா மாநிலத்தின் பரீதாபாத் மாவட்டத்தில் இந்நிறுவனத்தினை நிறுவ மாவட்ட காதி மற்றும் பரிதாபத்தின் கிராம தொழில் அலுவலர் நரேஷ் கடியான் பங்கு முக்கியமானது.

வரலாறு[தொகு]

16 ஜனவரி 1999 அன்று நடைபெற்ற நிதி நிலைக் குழுவின் கூட்டத்தில் இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.[3] தேசிய விலங்குகள் நல நிறுவனத்திற்கான கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (எட்.சி.ஐ.எல்)க்குச் செயல்படுத்தும் பணியைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.[2]

குறிக்கோள்கள்[தொகு]

  • தேசிய விலங்கு நல நிறுவனம், விலங்கு நலத்துறையில் ஓர் உச்ச அமைப்பாகக் கருதப்படுகிறது. இதன் பரந்த ஆணை ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொது நலன்களின் மூலம் விலங்கு நலனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கியது.
  • விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதைத் தடுக்கும் சட்டம், 1960இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்.
  • விலங்கு மேலாண்மை, நடத்தை மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட விலங்கு நலன் தொடர்பான பல்வேறு பிரிவுகளில் பயிற்சி மற்றும் கல்வியை வழங்குகிறது.[3]

வளாகம்[தொகு]

தேசிய விலங்கு நல நிறுவனம் 8-ஏக்கர் பரப்பில் அரியானாவின் பல்லப்கார்ப் பகுதியில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. TNN, "Govt trust for animal welfare soon", Times of India, 14 August 2002.
  2. 2.0 2.1 2.2 National Institute of Animal Welfare (a subordinate office of Ministry of Environment & Forests, Government of India) பரணிடப்பட்டது 2016-10-20 at the வந்தவழி இயந்திரம், Ministry of Environment and Forests, retrieved 1 August 2013 (pdf) பிழை காட்டு: Invalid <ref> tag; name "about" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "about" defined multiple times with different content
  3. 3.0 3.1 Division: National Institute of Animal Welfare (NIAW), Ministry of Environment & Forests, Government of India, updated 31 July 2013, retrieved 1 August 2013.