தேசிய விண்வெளி அறிவியல் கருத்தரங்கம்
Appearance
தேசிய விண்வெளி அறிவியல் கருத்தரங்கம் (National Space Science Symposium) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் ஒரு மாநாடாகும்.
விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி சமூகங்கள் ஒன்றிணைந்து புதிய முடிவுகளை வழங்குவதற்கும், தற்போதைய திட்டங்களின் முன்னேற்றத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் எதிர்கால விண்வெளித் திட்டங்களை கோடிட்டுக் காட்டுவதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை இக்கருத்தரங்கம் வழங்குகிறது.
பதிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மற்றும் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வளிமண்டல, விண்வெளி மற்றும் கோள் அறிவியல், வானியல் மற்றும் வானியற்பியல், சூரிய மண்டல விண்பொருட்கள் மற்றும் அவற்றின் ஆய்வுத் துறையில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களுக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது.[1][2]