தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
Established1993
Ownerஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்
Locationதிருச்சிராப்பள்ளி
Website[1]


தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி (National Research Center for Banana – NRCB) என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆகத்து 21 ஆம் தேதி திருச்சி தயனுர் அருகே உள்ள போதாவூர் என்ற ஊரில் துவக்கப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வாழையின் மகசூல் பெருக்கம் மற்றும் ஊட்ட்சத்து பெருக்கம் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.


இந்த மையம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வரு பிரிவும் அதற்குரிய குறிப்பிட ஆராய்ச்சிகளை இன்றளவும் செய்து வருகிறது. அவையாவன

  1. . பயிர் மேம்படுத்துதல் பிரிவு
  2. . பயிர் பெருக்கம் பிரிவு
  3. . பயிர் கப்பியல் பிரிவு மற்றும்
  4. . அறுவடை செய்த பின் மேம்பாடுகள்...


இந்த ஆராய்ச்சி மையம் நன்கு மேம்படுத்தபட்ட ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒரு சில ஆய்வகங்கள் பின்வருமாறு திசு வளர்ப்பு ஆய்வகம், உயிர் தொழில் நுட்பவியல் ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகம், உயிர்வேதியியல் ஆய்வகம், பூச்சியியல் ஆய்வகம், நேமதொடி ஆய்வகம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா சம்பந்தபட்ட ஆய்வகம் போன்றவை அடங்கும்.


சுமார் 1990 களில் இந்தியா முழுவதும் களப்பணிகள் மற்றும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில் உள்ள காட்டு வாழைகள், மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாழைகளும் பெல்ஜிய-இத்தில் உள்ள ITC எனப்படும் உலகளாவிய போக்குவரத்து மையத்தில் இருந்தும், இந்தியா வின் NBPGR தேசிய bureu தாவர மரபணு வளம் மூலமாகவும் வாழைகள் கொண்டுவரப்பட்டன.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய கண்டுபிடிப்பு[தொகு]

இந்த மையம் வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இதற்கு, “வாழை சக்தி” என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன், செம்பு போன்ற தாதுக்கள் மட்டும் அல்லாமல், மற்ற நுண் சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய பணிகள்[தொகு]

வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல். பழங்கால மற்றும் உயிர்த் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட இரகங்களை உருவாக்குதல் மற்றும் வேறுபாடுகளைப் பராமரித்தல். வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும்,தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது. வாழையில் இடம் சார்ந்த இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் ஆராய்ச்சியினை ஒருங்கிணைத்து வழிநடத்துவதாகவும் இந்நிலையம் திகழ்கின்றது.

சர்ச்சைகள்[தொகு]

இந்திய ஒன்றிய அரசாங்கம் தனது 103 தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களுள் ஒரே பயிருக்காக இருவேரு இடங்களில் செயல்படும் 43 நிறுவனங்களை மூட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது, இதில் தமிழ்நாட்டிலுள்ள மூன்று தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை மூட உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. சென்னையிலுள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தினை கொச்சியில் செயல்படும் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகவும் நவம்பர் 2017ல் செய்தி வந்ததையடுத்து தமிழக விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. [1]

மேற்கோள்[தொகு]

1.http://www.tamilpayani.com/tn/tiruchirappalli/index.htm 2. "வாழைப்பழத்தில் என்ன இருக்கிறது?". பார்த்த நாள் 26 மே 2

சான்றுகள்[தொகு]

  1. "தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு". தினமணி.