உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய வாதநோய், தசை-எலும்பு மற்றும் தோல் நோய்கள் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய வாதநோய், தசை-எலும்பு மற்றும் தோல் நோய்கள் கழகம் (National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases; NIAMS) ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மனித நல மற்றும் சேவை துறையின் முகமை நிலையமான தேசிய நல கழகத்தின் ஒரு நிறுவனமாகும். இக்கழகம் வாதநோய், தசை-எலும்பு மற்றும் தோல் நோய்கள் உருவாவதற்கான காரணங்கள், சிகிச்சைகள், நோய்த்தடுப்பு முறைகள் ஆகியவற்றின் ஆய்வுகளுக்கான அமெரிக்க கூட்டாட்சியின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறது. மேலும், அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இத்தகு ஆய்வு செய்வதற்கான பயிற்சியளித்தல், பொதுமக்கள் நலத்தினை மேம்படுத்தும் ஆராய்ச்சி முன்னேற்றங்களைக் குறித்த தகவல்களைப் பரப்புதல் போன்ற பணிகளையும் செய்கிறது. இக்கழகம் அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், மருத்துவ மையங்களிலும் அடிப்படை, மருத்துவ, நோய்ப்பரவல் ஆய்வுகளை செய்தும், அத்தகு ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளித்தும் செயல்படுகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.niams.nih.gov/