தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்
முந்தைய பெயர்s
தேசிய MST தொலைக்கண்டுணர் வசதி
வகைஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1992
பணிப்பாளர்பேராசிரியர். ஏ. செயராமன்
அமைவிடம்காடங்கி, ஆந்திரப்பிரதேசம், இந்தியா
13°27′25″N 79°10′30″E / 13.457°N 79.175°E / 13.457; 79.175
இணையதளம்www.narl.gov.in

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (National Atmospheric Research Laboratory NARL) என்பது இந்திய விண்வெளித் துறையிலிருந்து நிதி ஆதாரம் பெற்று தனித்தியங்கக் கூடிய ஆராய்ச்சி நிறுவனமாகும்.].[1] தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்' வளிமண்டல அறிவியல் துறையிலுள்ள அடிப்படை மற்றும் இயற்பியல் பயன்முறை ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1992ல் ”தேசிய இடைவெளிமண்டல-வெம்மடுக்குமண்டல-அடிவளிமண்டல (National Mesosphere-Stratosphere-Troposphere (MST) RadarFacility (NMRF)) தொலைக் கண்டுணர்வசதி” எனத் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டு காலங்களில் மேலும் பிற வசதிகளான லிடார் மின் காந்த கதிர்வீசல் அல்லது வெளிச்ச அலகு, காற்று விவர வரைவு (wind profiler), ஒளிச்சுழல் மழைமானி (Optical rain gauge), மழைத்துளி அளவறிவி (disdrometer), தானியங்கு வானிலை நிலையம், மேலும் இதுபோன்ற பல வசதிகளும் இணைக்கப்பட்டன. பின்னர் ”தேசிய இடைவெளிமண்டல-வெம்மடுக்குமண்டல-அடிவளிமண்டலத் தொலைக் கண்டுணர்வசதி” ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக விரிவுபடுத்தப்பட்டு 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் ”தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகமாக” மறுபெயரிடப்பட்டது..[2]

மேற்கோள்கள்[தொகு]