தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து
வகைபொது
அமைவிடம், ,
India
இணையதளம்www.niperhyd.ac.in

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து (National Institute of Pharmaceutical Education and Research, Hyderabad) என்பது இந்திய பொது மருந்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்நிறுவனம் இந்தியாவின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு பள்ளிகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மருந்து அறிவியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, இந்திய மருந்துத் துறையின் மனித வள மேம்பாட்டில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.[1]

இந்த நிறுவனம் ஐதராபாத்தில் பாலா நகரில் உள்ள இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ளது.[2] இந்த நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.

இந்நிறுவனம் ஆந்திரப் பிரதேச மருத்துவ மண்டலத்துடன் இணைந்து மருத்துவ சாதனங்களை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கப் பாராட்டத்தக்க முயற்சியை எடுத்துள்ளது.

தரவரிசை[தொகு]

2021ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு மருந்துப் படிப்புகளில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து 6 வது இடத்தைப் பிடித்துள்ளது.[3]

படிப்புகள்[தொகு]

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து பின்வரும் படிப்புகளை வழங்குகிறது:

  • முதுநிலை வணிக நிர்வாகங்மருந்தகம்
  • மருத்துவ வேதியியல், எம். எஸ். (மருந்தகம்)
  • மருந்தியல் மற்றும் நச்சுயியல், எம். எஸ். (மருந்தகம்)
  • மருந்தியல் பகுப்பாய்வு, எம். எஸ். (மருந்தகம்)
  • மருந்தியல், எம். எஸ். (மருந்தகம்)
  • ஒழுங்குமுறை நச்சுயியல், எம்.எஸ்
  • செயல்முறை தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை வேதியியல்., எம். டெக்.
  • மருத்துவ சாதனங்கள், எம். டெக் [4]

இதுவரை 32 முனைவர் பட்ட மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]