உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்

ஆள்கூறுகள்: 12°56′22.4″N 77°35′55.7″E / 12.939556°N 77.598806°E / 12.939556; 77.598806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்
குறிக்கோளுரைசமத்துவமே யோகா எனப்படுகிறது
समत्वं योग उच्यते (சமசுகிருதம்)
வகைபொது மருத்துவப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்
  • 1847; 179 ஆண்டுகளுக்கு முன்னர் (1847) பெங்களூரு மனநல ஆசிரமம்[1]
  • 1925; 101 ஆண்டுகளுக்கு முன்னர் (1925) அரசு மனநல மருத்துவமனை
  • 27 December 1974; 51 ஆண்டுகள் முன்னர் (27 December 1974) தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)
நிதிநிலை860 கோடி (ஐஅ$100 மில்லியன்)(2025)[2]
இயக்குநர்மரு. பிரதிமா மூர்த்தி[3]
கல்வி பணியாளர்
249 [4]
மாணவர்கள்553 [4]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்269 [4]
284 [4]
அமைவிடம், ,
12°56′22.4″N 77°35′55.7″E / 12.939556°N 77.598806°E / 12.939556; 77.598806
வளாகம்நகர்புறம்[5][note 1]
நற்பேறு சின்னம்வெள்ளை அன்னம்
இணையதளம்nimhans.ac.in

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (National Institute of Mental Health and Neuro-Sciences (சுருக்கமாக:NIMHANS), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத் தலைநகரான பெங்களூரில் 174 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[6][7][8]மருத்துவமனையுடன் இயங்கும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இது தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகிறது.[9]இந்நிறுவனம் மனநலம் மற்றும் நரம்பு நோய்கள் தொடர்பானவைகளுக்கு கட்டணமில்லா மருத்துவச் சேவைகள் தருகிறது.

மேலும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவன வளாகத்தில் நரம்புமண்டலவுயிரியல் ஆராய்ச்சி மையம் 2007ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

இந்த மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் பொதுத்துறை மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைகழகமாக செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் 249 பேரராசிரியர்கள் உள்ளனர். மேலும் 553 முதுநிலை மற்றும் சிறப்பு பட்டப்படிப்பு மாணவர்களும், 284 இளநிலை ஆய்வு மாணவர்கள் மற்றும் முதுமுனைவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

முதுநிலை, சிறப்பு மற்றும் ஆய்வுத் துறைகள்

[தொகு]

நரம்பியல் துறையில் முதுநிலைப் படிப்புகள், சிறப்பு மருத்துவப் படிப்புகள், முனைவர் மற்றும் முதுமுனைவர்களுக்கான ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுகிறது.

  • உயிரிஇயற்பியல்
  • உயிரிபுள்ளியியல்
  • அடிப்படை நரம்பு அறிவியல்
  • மனித மரபியல்
  • நரம்பு வேதியியல்
  • நரம்பு நுண்ணுயிரியல்
  • நரம்பியல் நோய்கள்
  • நரம்பியல் உடலியல்
  • நரம்பு தீநுண்மியியல்
  • மனநலக் கல்வி[10]
  • மருத்துவ உளவியல்
  • சிறார் மற்றும் பெரியவர்களுக்கான மனநல மருத்துவம்
  • மனநல சமூகப் பணி
  • மனநல மருத்துவம்
  • நரம்பியல் செவிலியர் பயிற்சி
  • மருத்துவ நரம்பியல்
  • நரம்பு அறுவை சிகிச்சை
  • மனநல மருந்தியல் மற்றும் நரம்பு நச்சுயியல்
  • நரம்பியல் கதிரியக்கவியல் மற்றும் நியூரோஇமேஜிங்
  • நரம்பியல்
  • தொற்றுநோயியல்
  • நரம்பியல் மறுவாழ்வு
  • நரம்பியல் அறுவை சிகிச்சை மயக்க மருந்து மற்றும் நரம்பியல் சிகிச்சை
  • மனநல மறுவாழ்வு
  • பேச்சு நோயியல் மற்றும் செவிப்புலன் மருத்துவம்
  • இரத்தமாற்ற மருத்துவம் மற்றும் இரத்தவியல்

3 ஆண்டு இளநிலை கல்வித் திட்டங்கள்

[தொகு]
  • செவிலியர் (நரம்பியல்) பயிற்சி
  • மயக்க மருந்து தொழில்நுட்பம்
  • ரேடியோகிராபி
  • நரம்பியல்-உடலியல் தொழில்நுட்பம்

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Total area of the institute includes 144 acres of the existing campuses and 30 acres of land acquired for the construction of Bangalore north campus

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History and Milestones – Nimhans" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 30 May 2024. Retrieved 2022-09-26.
  2. "DEMAND NO. 46, Department of Health and Family Welfare, MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE" (PDF). Indiabudget.gov.in. 1 Feb 2025. Retrieved 1 Feb 2025.
  3. Chauhan, Bala. "Senior psychiatrist Pratima Murthy Appointed as director of NIMHANS for five years". The New Indian Express June 19, 2021 10:18 AM IST (Bengaluru) இம் மூலத்தில் இருந்து 25 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210625132602/https://www.newindianexpress.com/states/karnataka/2021/jun/19/senior-psychiatrist-pratima-murthy-appointed-as-director-ofnimhans-for-five-years-2318528.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 "NIRF 2022" (PDF). NIRF. Archived (PDF) from the original on 28 August 2024. Retrieved 16 January 2025.
  5. Campus, NIMHANS (September 2022). "Campus Area" (PDF). nimhans.ac.in. Archived from the original (PDF) on 19 May 2021. Retrieved 18 September 2022.
  6. "NIMHANS North Campus plan inches ahead". Bangalore Mirror. Archived from the original on 1 December 2024. Retrieved 16 January 2025.
  7. "NIMHANS NORTHERN CAMPUS (KYALASANAHALLI)". NIMHANS NORTHERN CAMPUS (KYALASANAHALLI).
  8. Dhar, Aarti (21 October 2010). "NIMHANS to be declared institute of national importance". The Hindu. https://www.thehindu.com/news/national/NIMHANS-to-be-declared-institute-of-national-importance/article15786689.ece. 
  9. "Speeches Detail - The President of India". PresidentOfIndia.nic.in. Archived from the original on 13 April 2017. Retrieved 17 May 2017.
  10. "Mental Health Education Nimhans". Archived from the original on 14 January 2025. Retrieved 16 January 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]