தேசிய மகளிர் நாள்
தோற்றம்
தேசிய மகளிர் நாள் (இந்தியா) (National women's day (India)) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று இந்தியாவில், சரோசினி நாயுடுவின் பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது. அவர் 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்தார். சரோசினி நாயுடு இந்திய சுதந்திர இயக்கத்தின் ஒரு தீவிரத் தலைவராக இருந்தார். இவர் தனது இலக்கியப் படைப்புகளுக்காக, குறிப்பாக தேசபக்தி, காதல் மற்றும் கவிதைகள் போன்ற கருப்பொருள்களைக் கொண்ட கவிதைகளுக்காக அறியப்பட்டவர். இதற்காக மகாத்மா காந்தியால் அவர் "இந்தியாவின் நைட்டிங்கேல்" ('பாரத கோகிலா') இந்தியாவின் கவிக்குயில் என்றும் அழைக்கப்பட்டார். சரோசினி நாயுடு எப்போதும் இந்தியாவில் பெண்களின் அதிகார மேம்பாட்டிற்காகவே நின்றார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Why is National Women's Day Celebrated on Sarojini Naidu's Birth Anniversary?". Network 18. 13 February 2022. Retrieved 28 July 2022.
- ↑ "National Women's Day 2021: Remembering Sarojini Naidu on her 142nd Birth Anniversary". India Today. 13 February 2021 இம் மூலத்தில் இருந்து 28 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220728144534/https://www.indiatoday.in/information/story/national-women-s-day-2021-remembering-sarojini-naidu-on-her-142nd-birth-anniversary-1768881-2021-02-13. பார்த்த நாள்: 28 July 2022.