உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய புத்தக அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய புத்தக அறக்கட்டளை, இந்தியா
சுருக்கம்NBT
உருவாக்கம்ஆகத்து 1, 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-01)
வகைஅரசு நிறுவனம்
தலைமையகம்தில்லி, வசந்த் குஞ்ச்
தலைமையகம்
சேவை பகுதி
இந்தியா
ஆட்சி மொழி
ஆங்கிலம், இந்தி
President
பல்தேவ் பாய் சர்மா
வெளியீடு
  • என்பிடி செய்திமடல்
தாய் அமைப்பு
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு
வலைத்தளம்Official Website

தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust (NBT) என்பது ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனமாகும். இது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக 1957 ல் நிறுவப்பட்டது. இது இப்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் குறைந்த கட்டணத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னாட்சி அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது. [1] இவர்களின் அண்மைய வெளியீடுகள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. மலிவான விலையில் நல்ல புத்தகங்கள் என்ற குறிக்கோளுடன், புத்தகங்களைத் தயாரித்தல், வாசிப்பை ஊக்குவித்தல், நூலாசிரியர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உதவுதல், குழந்தை இலக்கியம் வளர்த்தல் ஆகியன இதன் கடமைகள். இது பல இந்திய மொழிகளில் குழந்தைகள் உட்பட பல்வேறு வயது உடையவர்களுக்கான புத்தகங்களை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About NBT: History". NBT website இம் மூலத்தில் இருந்து 2008-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080409080908/http://www.nbtindia.org.in/innerPage.aspx?aspxerrorpath=%2FNBTHistory.aspx. பார்த்த நாள்: 2008-08-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_புத்தக_அறக்கட்டளை&oldid=3321634" இலிருந்து மீள்விக்கப்பட்டது